அடை கட்லெட்
Page 1 of 1
அடை கட்லெட்
புழுங்கல் அரிசி - 1 கப்,
துவரம் பருப்பு - கால் கப்,
கடலைப்பருப்பு - கால் கப்,
பாசிப் பருப்பு - 1 கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 கரண்டி,
வெள்ளை காராமணி - சிறிது,
வெங்காயம் - 1,
பூண்டு - 2 பல்,
பச்சை மிளகாய் - 5,
உப்பு - தேவைக்கேற்ப,
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு,
கறிவேப்பிலை,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
புழுங்கல் அரிசியை தனியாகவும், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனியாகவும் 1 மணி நேரம் ஊற வைத்து, அடை மாவு பதத்துக்குக் ‘கரகர’வென அரைக்கவும். உப்புச் சேர்க்கவும். காராமணியை வெறும் கடாயில் வறுத்து, 1 மணி நேரம் ஊற வைத்து மாவில் கலக்கவும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, இட்லிகளாக வார்க்கவும். ஆறியதும், விருப்பமான வடிவில் வெட்டவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருள்களைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் இட்லி துண்டுகளைச் சேர்த்து வதக்கி, சாஸுடன் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum