நண்டு கட்லெட்
Page 1 of 1
நண்டு கட்லெட்
தேவையான பொருட்கள்
(அவித்த)பெரியநீளக்கால் நண்டு(சதை) – 5
முட்டை – 2
கடலை மா – கால் கிலோ
பொடியாக நறுக்கியசின்னவெங்காயம் – அரை கிலோ
இஞ்சி – ஒரு துண்டு
பொடியாக நறுக்கியபச்சை மிளகாய்- 10
ரக்ஸ்தூள் – 100 கிராம்
உள்ளி – ஒன்று
கறுவாப்பட்டை – சிறிய துண்டு
கராம்பு – 3
பெருஞ்சீரகம் – தேவையானளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
மிக்சியில்(கிரைண்டரில் )இஞ்சி, உள்ளி(பூண்டு ), பெருஞ்சீரகம் (சோம்பு ), கராம்பு, கறுவாப்பட்டை ஆகியவற்றை நீர் விட்டு மைய அரைக்கவும்.
அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் நண்டு சதையுடன், கடலைமா, வதக்கிய பச்சைமிளகாய் வெங்காயம் அரைத்த கலவை, உப்பு, கறிவேப்பிலை ஆகிய வற்றை சேர்த்து நன்றாக குழைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அவற்றை சாதுவாக அமர்த்தி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக நுரை வரும்வரை அடிக்கவும்.
அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது கொதித்ததும் உருட்டி தட்டிய கட்லெட்டை முட்டையில் தோய்த்து ரக்ஸ் தூளில் பிரட்டி அதை எண்ணெயில் போட்டு சிவக்க பொரிக்கவும்.
பொரித்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான நண்டு கட்லட் தயாராகிவிடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum