இன்ஹேலர் வடிவில் வருகிறது இன்சுலின்
Page 1 of 1
இன்ஹேலர் வடிவில் வருகிறது இன்சுலின்
நீரிழிவு நோயாளிகளுக்கு
ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது. அதாவது இன்சுலின் ஊசிக்கு
பதிலாக வாய் வழியாக உள்ளிழுக்கப்படும் (இன்ஹேலர்) வடிவில்
இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விரைவில்
விற்பனைக்கும் வர உள்ளது.
அமெரிக்காவைச்
சேர்ந்த மேன்கைண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம்தான் அப்ரீசா
(Afresa) என்ற பெயரில் இன்சுலின் இன்ஹேலரைத் தயாரித்துள்ளது.
இது
குறித்து ஆராய்ச்சிக் குழுத் தலைவர் ஆன்ட்ரியா லியோன் பே
கூறுகையில், நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து இன்சுலின்
ஊசியைப் போட்டுக் கொள்வது என்பது ஒரு வலி நிறைந்த
அனுபவமாகும். இன்சுலினை உடலுக்குள் செலுத்த ஊசியைத் தவிர வேறு
வழியில்லாததே இந்த கொடுமைக்குக் காரணமாக இருந்து வந்தது.
அவர்களுக்கு
மகிழ்ச்சி தரும் விஷயமாக, அப்ரீசா இன்ஹேலர்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்சுலின் ஊசியை விட வேகமாகச்
செயல்படக் கூடியது. இந்த இன்ஹேலரைப் பயன்படுத்துதியதுமே
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயல்பான நிலைக்கு மாற்றும்
ஆற்றல் கொண்டுள்ளது. அதே சமயம் சர்க்கரை அளவு குறிப்பிட்ட
அளவுக்கும் கீழ் குறையாமலும் பாதுகாக்கும் வல்லமை
படைத்துள்ளது.
இந்த
இன்ஹேலரில் டெக்னோஸ்பியர் என்ற புதிய தொழில்நுட்பம்
பயன்படுத்தப்பட்டுள்ளது. வாய் வழியாக உள்ளிழுக்கப்படும்
இன்சுலின் பவுடர், நுரையீரலுக்கு சென்று உடனடியாக ரத்தத்தில்
கலக்கிறது. இன்ஹேலரை உறிஞ்சிய 12 நிமிடங்களில் நோயாளிக்கு
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்குத்
திரும்பிவிடும். மேலும், இன்சுலின் ஊசியை விட இன்ஹேலர் மூலம்
செலுத்தப்பட்ட இன்சுலின் ரத்தத்தில் அதிக நேரம்
செயல்படுகிறது என்பது கூடுதல் அம்சமாகும்.
அப்ரீசா
இன்ஹேலர் தற்போது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்
துறையின் அனுமதிக்காக சென்றுள்ளது. அந்த அனுமதி கிடைத்ததும்
அப்ரீசா உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்துவிடும் என்று
கூறுகிறார் ஆன்ட்ரியா லியோன் பே.
இதற்கு
நீரிழிவு நோய் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் பலரும் வரவேற்பு
அளித்துள்ளனர். மருத்துவ உலகில் இது ஒரு மைல் கல் என்றும்
பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இன்ஹேலர் வடிவில் வருகிறது இன்சுலின்
» புத்திக் கூர்மை அதிகரிக்க சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது. பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத்
» மருத்துவக் காப்பீடு அவசியமாகிறது
» 30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்
» கொசு மூலம் பரவுகிறது காய்ச்சல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum