30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்
Page 1 of 1
30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்
ஆண்களுக்கு
விபத்து அல்லது ரத்த தானம் செய்யும் போது மட்டுமே ரத்த இழப்பு
ஏற்படுகிறது. ஆனால் ஒரு பெண் என்று எடுத்துக் கொண்டால்,
மாதவிலக்கு, மகப்பேறு போன்ற சமயங்களில் நேரடியாக ரத்த இழப்பு
ஏற்படுகிறது. மேலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு மறைமுகமாக ரத்த
இழப்பு ஏற்படுகிறது.
இதுபோன்ற
சமயங்களில் பெண்கள் பலவீனமானவர்களாக மாறுகின்றனர். இதனால்தான்
சுமார் 30 வயதை அடையும் பெண்களின் உடலில் கால்சியம் குறையத்
துவங்குகிறது. கால்சியம் குறைபாட்டினால் ஏற்படும் வியாதிகள்
பல. அதில் முக்கியமானது எலும்பு தேய்மானமாகும்.
WD எலும்பு
தேய்மானம் என்றால் பலருக்கும் என்னவென்று தெரிவதில்லை.
எலும்பில் உள்ள கால்சியம் சத்து குறைந்து எலும்பு
பலவீனமாகிறது. கழுத்து, மூட்டுப் பகுதிகளில் எலும்புத்
தேய்மானம் ஆனபிறகு தான் அங்கு வலிக்க ஆரம்பிக்கிறது. வலி
வந்ததும் பெண்கள் மருத்துவரை அணுகினால், எலும்பு தேய்ந்து
விட்டது என்று கூறுகிறார்கள். எலும்பு தேய்வை நிறுத்தலாமேத்
தவிர, தேய்ந்த எலும்பை மீண்டும் சீராக்குவதற்கான வாய்ப்புகள்
மிகக் குறைவே.
சிலருக்கு
எலும்புத் தேய்மானம் என்பது தீவிரமடைந்து, அவர்கள் கீழே
விழுந்தால் கூட உடனடியாக எலும்பு உடைந்துவிடும் நிலையில்
இருக்கும். இந்தியாவில் 45 வயதில் இருக்கும் பெண்களில்
மூன்றில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் உள்ளது. இப்படியே
சென்றால், வருங்காலத்தில் எலும்பு முறிவுகளில் பெரும்
விழுக்காடு இந்தியாவில்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிலும்,
எலும்புத் தேய்மான நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெண்களே
அதிகம். இதற்குக் காரணம், சத்துக்குறைபாடுதான். தாய்மார்கள்
பலரும் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும் என்பதில் கவனம்
செலுத்துவார்களேத் தவிர, பாலூட்டும் தாய்மார்கள் போதிய உணவை
சாப்பிட வேண்டும், அதற்கான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்
என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள்.
WD அதாவது,
பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலுக்குத் தேவையான கால்சியம்
அவர்கள் உட்கொள்ளும் உணவில் இருந்து எடுக்கப்படும். நாம்
சாப்பிடும் உணவில் போதிய கால்சியம் இல்லாத நிலையில்
எலும்பில் இருந்துதான் கால்சியம் செல்கிறது. நிறைய பெண்கள்
பாலூட்டும் சமயத்தில் மெலிந்து போவதற்கு இதுதான் காரணம்.
போதிய ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ளாமல் பாலூட்டும்
தாய்மார்களுக்குத்தான் எலும்புத் தேய்மானம் அதிகமாக
ஏற்படுகிறது.
அதற்காக
தாய்ப்பால் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல,
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிகமாக முட்டை, பால்,
கீரைகளை உண்ண வேண்டும். அதில்லாமல் மருத்துவர்கள் சிபாரிசு
செய்யும் இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்த
மாத்திரைகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். அப்போதுதான்
பாலுக்குத் தேவையான கால்சியம் உடலுக்குக் கிடைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்
» புத்திக் கூர்மை அதிகரிக்க சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது. பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத்
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.

» நீரிழிவுக்கு ஆவாரை மருந்தாகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum