கொசு மூலம் பரவுகிறது காய்ச்சல்
Page 1 of 1
கொசு மூலம் பரவுகிறது காய்ச்சல்
தற்போது பல்வேறு இடங்களில், பலருக்கும் காய்ச்சல் பரவி வருகிறது. முதலில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவி வந்த இந்த காய்ச்சல் தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவிவிட்டது.
பெரும்பாலான மருத்துவமனைகளில் காய்ச்சல் வந்தவர்கள் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் காய்ச்சல் தொற்றிக் கொள்கிறது.
இந்த விஷக் காய்ச்சல் கொசுக்கள் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாகப் பரவி வருகிறது என்று கூறப்படுகிறது.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் கண்டவர்களுக்கு கை, கால், மூட்டு, பிடரிகளில் அதிகமான வலி ஏற்படுகிறது. இதனால், அவர்கள் நிற்க கூட முடியாமல் முடங்கி விடுகின்றனர். சிக்கன் குனியா போன்று இந்நோயின் அறிகுறிகள் உள்ளன. ஆனால் இந்த காய்ச்சல் சிக்கன் குனியா அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொசுக்கள் மூலம்தான் இந்த காய்ச்சல் பரவுகிறது என்பதால், கொசுக்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்த விஷக் காய்ச்சல் மற்ற மாவட்டங்களிலும் பரவியுள்ளது. கடலூர் மாவட்டம் சங்கொலிகுப்பம் கிராமத்தில் சுமார் 500 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கெடார் அருகே கடையம் உள்ளிட்ட சில கிராமங்களில் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதே போல், திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலும் மர்ம காய்ச்சல் பரவி வருக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில், பேராவூரணி, செங்கமங்கலம், பூவாளூர் பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தினமும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. திருச்சி, சேலம் மாவட்டத்திலும் சில கிராமங்களில் இதே காய்ச்சல் வந்து, ஏராளமானோர் அவதிப்படுகின்றனர்.
காய்ச்சலின் தாக்கம் மதுரையில்தான் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இது குறித்து அரசு செயலர் பேசுகையில், தென்மாவட்டங்களில் பரவும் காய்ச்சல் மர்மக் காய்ச்சல் இல்லை. இது கொசுக்களால் பரவும் சாதாரண காய்ச்சல்தான். மக்கள் பயப்பட வேண்டாம்.
காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொசுக்களை ஒழிப்பதற்காக ரூ.43 லட்சம் செலவில் 5 நவீன புகை அடிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டது. அந்த இயந்திரங்கள் இப்போது தென்மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் டேங்குகளை மாதத்திற்கு ஒரு முறை சுத்தமாக கழுவி காய வைக்க வேண்டும். வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புத்திக் கூர்மை அதிகரிக்க சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது. பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத்
» ஷவரில் பரவும் பாக்டீரியாக்கள்
» கொசுத் தொல்லைக்கு ஒரேத் தீர்வு
» நோய்களைப் பரப்புவதில் கொசுவிற்கு இரண்டாம் இடம்
» உயரம் வாழ்க்கையின் தரத்தை பாதிக்கிறது : ஆய்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum