தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காய்கறி உப்புச்சார்

Go down

காய்கறி உப்புச்சார்         Empty காய்கறி உப்புச்சார்

Post  ishwarya Tue Feb 26, 2013 12:38 pm

புளி – எலுமிச்சை அளவு
கொண்டைக் கடலை – 1/2 கப்(காய்ந்தது)
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
கத்தரிக்காய் – 4, 5 (பச்சை, பிஞ்சு என்றால் நன்றாக இருக்கும்.)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை.
* புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
* சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும்.
* கத்தரிக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
* கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் (மண்சட்டி என்றால் நன்றாக ஒரேமாதிரியாக வறுக்கலாம்) போட்டு (எண்ணையில்லாமல்) வறுக்கவும். இதிலேயே ஓரளவு நன்றாக வெந்துவிடும்.
* அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
* அத்துடன் பயறு, புளிக்கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும். புளிக்கலவையை ஊற்றியபின் கரண்டி போடமல் இருக்கவேண்டும். பயறு வேகாதாம். (வறுத்த பயறு புளிக்கலவையில் வேகவேண்டும். வறுபட்டதினால் சீக்கிரம் வெந்துவிடும். குக்கரில் வேகவைக்கத் தேவையில்லை.)
* தேவையான அளவு உப்பு போட்டு, மேலும் சிறிது எண்ணையை ஊற்றவும்.
* பயறு வெந்ததும் (கரண்டி போடமல் தெரிந்து கொள்ளவேண்டுமாம்!), புளி நன்றாகக் காய்ந்ததும் இறக்கிவிடவும்.

* மண்சட்டியில் செய்தால் சுவையாக இருக்கும்.

* கத்திரிக்காய்க்குப் பதில் தனியாக வெண்டைக்காய் மட்டும் போட்டும் செய்யலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum