கிரில்டு முந்திரி சிக்கன் மற்றும் ஆரஞ்ச் சாஸ்
Page 1 of 1

சிக்கன் கால் - 2
முந்திரி - 50 கிராம்
வெங்காயம் சிறியது - 3
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 2
சோயா சாஸ் - 30 மிலி
ஊஸ்டர் சாஸ் - 15 மிலி
எலுமிச்சை சாறு - 5 மிலி
லெமன் கிராஸ் - 5 கிராம்
உப்பு - சுவைக்கு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
பாசுமதி அரிசி - 200 கிராம்
ஆரஞ்சு பழ தோல் - 20 கிராம்
நறுக்கிய பார்ஸ்லே - 5 கிராம்
சாஸ் செய்ய தேவையானவை
ஆரஞ்சு பழ சாறு - 100 மிலி
ஆரஞ்சு சுளை - 2
வெள்ளை வைன் - 50 மிலி
நறுக்கிய பார்ஸ்லே - 5 கிராம்
உப்பு, மிளகு தூள் - சுவைக்கு ஏற்ப
பசுமதி அரிசியை தனியே வேகவைத்து கொள்ளவும். சிக்கன் கால்களை நன்கு கழுவி ஆங்காங்கே கத்தியால் கீறவும். முந்திரி, வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், லெமன் கிராஸ், உப்பு, சர்க்கரை அனைத்தையும் மிக்சியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள விழுதை சிக்கன் கால்கள் மேல் பரப்பி இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். அதன் பிறகு தவாவில் சிக்கனை இரண்டு பக்கம் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
கடாயை சூடு செய்து அதில் ஆரஞ்சு பழ சாறு மற்றும் தோல் உறிக்கப்பட்ட ஆரஞ்சு பழம் சேர்த்து கொதிக்க விடவும். பழம் வெந்ததும் அதில் வெள்ளை வைன், பார்ச்லே சேர்க்கவும். தேவைகேற்ப மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஏற்கனவே வறுத்து வைத்துள்ள சிக்கனுடன் சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணை சேர்ந்து நறுக்கிய பூண்டை வதக்கி அதில் நறுக்கிய ஆரஞ்சு பழ தோல் மற்றும் பார்ஸ்லேவை சேர்த்து பிறகு வேகவைத்த சாதம் அதன் மேல் சிக்கன் சேர்த்து ஒரு நிமிடம் மூடி வைத்து இறக்கி சூடாக பறிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum