நெயில் பாலீஷ் மாதிரி ஹேர் பாலீஷ்
Page 1 of 1
நெயில் பாலீஷ் மாதிரி ஹேர் பாலீஷ்
யெஸ்... நகங்களை அழகாக, பளபளப்பாக, ஆரோக்கியமாக வைத்திருக்க நெயில் பாலீஷ் எப்படி உதவுமோ, அதே மாதிரிதான் கூந்தலுக்கு ஹேர் பாலீஷ். வெளிநாடுகளில் ஏற்கனவே பிரபலமாக உள்ள இது இந்தியாவுக்கு ரொம்பவே புதுசு. ஹேர் பாலீஷ் பற்றி விரிவாகப் பேசுகிறார் அழகுக் கலை நிபுணர் மேனகா.‘‘நடிகைகள், மாடல்கள்னு சில பேரோட கூந்தல் பளபளப்பா, மிருதுவா இருக்கிறதைக் கவனிச்சிருப்பீங்க.
அவங்களுக்கு மட்டும் முடி எப்படித்தான் அவ்ளோ அழகா இருக்கோனு புலம்பியிருப்பீங்க. பலரும் நினைச்சிட்டிருக்கிற மாதிரி அது நடிகைங்களுக்கும், மாடல்களுக்கும் மட்டுமே சாத்தியமாகற விஷயமில்லை. ஹேர் பாலீஷ்னு சொல்ற புது டெக்னிக் மூலமா யார் வேணாலும், அதே மாதிரி பளபளப்பான, அழகான கூந்தலைப் பெறலாம்.18 வயசுக்கு மேல இந்த சிகிச்சையைப் பண்ணிக்கலாம். முதல்ல கூந்தலை அலசி, சுத்தப்படுத்தணும். அப்புறம் ஹேர் பாலீஷ் தடவி, குறிப்பிட்ட நேரம் காத்திருக்கணும்.
அதுக்கடுத்து கூந்தலை அலசி, கண்டிஷனர் போட்டு, 15 நிமிஷம் விட்டுட்டு, முடி ஈரமா இருக்கிற போதே சீரம்னு சொல்ற ஒரு திரவத்தை தடவணும். நம்மூர்ல பலரும் தலை குளிக்கிறதுன்னா வெறுமனே ஷாம்பு போட்டுக் குளிக்கிறதோட சரினு நினைச்சுக்கறாங்க. ஆனா, ஷாம்பு குளியலுக்குப் பிறகு கண்டிஷனரும், சீரமும் உபயோகிச்சாதான், கூந்தல் மிருதுவா இருக்கும்.
ஹேர் பாலீஷ் சிகிச்சைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை எடுக்கும். அதோட பலன் 2 மாசம் வரை நீடிக்கும். ஹேர் பாலீஷ் பண்ணிக்கிட்டவங்க, வீட்லயே அதைத் தக்க வச்சுக்க பிரத்யேக ஷாம்பு, கண்டிஷனர் உபயோகிக்கணும். டை உபயோகிக்கிறவங்களுக்கும், கலரிங் பண்றவங்களுக்கும் அதிக கெமிக்கல் காரணமா, முடி வறண்டு அசிங்கமா இருக்கும்.
அவங்களுக்கு இந்த ஹேர் பாலீஷ் ரொம்பவே உதவியா இருக்கும். சிலருக்கு முடி நீளமா இருக்கும். ஆனா, பார்க்க அழகாவே இருக்காது. இன்னும் சிலர் கொஞ்ச முடி வச்சிருந்தாலும், அதை பளபளப்பா, அடர்த்தியா வச்சிருப்பாங்க. எவ்ளோ நீளமான முடியா இருந்தாலும், அதை அழகா வச்சிருக்க ஹேர் பாலீஷ் பண்ணிக்கலாம். 2 மாசம் கழிச்சு, பழைய பாலீஷை எடுத்துட்டு, புதுசா பண்ணிக்கலாம். பார்ட்டிக்கு போறவங்க, மணப்பெண்கள் மத்தில இது ரொம்ப பிரபலமாயிட்டு வருது’’ என்கிற மேனகா, கூந்தல் அழகையும், ஆரோக்கியத்தையும் தக்க வைத்துக் கொள்ள சில சிம்பிள் டிப்ஸ் தருகிறார்.
உலகத்துலயே தென்னிந்தியர்களோட கூந்தல்தான் பெஸ்ட். ஆனா, தவறான அழகு சாதனங்கள், சிகிச்சையால அதைக் கெடுத்துக்கிறவங்கதான் அதிகம். எப்பவுமே தலையை அலச நல்ல தண்ணீர்தான் உபயோகிக்கணும். உப்பு தண்ணீர், கூந்தலுக்கு நல்லதே இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்காதவங்க, சாதா தண்ணீர்ல குளிச்சிட்டு, கடைசியா அலசறதுக்காவது நல்ல தண்ணீர் உபயோகிக்கலாம்.
சுருட்டை முடி உள்ளவங்க அகலமான பல் உள்ள சீப்புகளையும், நேரான கூந்தல் உள்ளவங்க, தட்டையான பல் உள்ள சீப்பையும் உபயோகிக்கணும்.
ஒவ்வொருத்தர் சருமத்துக்கும் ஏத்தபடி ஃபேஷியல் பண்ணிக்கிற மாதிரி, அவங்கவங்க கூந்தலோட தன்மை தெரிஞ்சுதான் அதுக்கான பொருள்களையும், சிகிச்சைகளையும் எடுத்துக்கணும்.நிறைய தண்ணீர், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் - இந்த ரெண்டும் கூந்தல் அழகுக்கு அடிப்படை..

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹேர் பாலீஷ்
» ஹேர் பாலீஷ்
» தீபாவளிக்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ண போறீங்க....
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
» நெயில் பாலிஷ்ஷை மட்டுமன்றி வீட்டையும் சுத்தம் செய்ய பயன்படும் நெயில் பாலிஷ் ரிமூவர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum