ஹேர் பாலீஷ்
Page 1 of 1
ஹேர் பாலீஷ்
நடிகைகள், மாடல்கள்னு சில பேரோட கூந்தல் பளபளப்பா, மிருதுவா இருக்கிறதைக் கவனிச்சிருப்பீங்க. ஹேர் பாலீஷ் டெக்னிக் மூலமா யார் வேணாலும், அதே மாதிரி பளபளப்பான, அழகான கூந்தலைப் பெறலாம். 18 வயசுக்கு மேல இந்த சிகிச்சையைப் பண்ணிக்கலாம். முதல்ல கூந்தலை அலசி, சுத்தப்படுத்தணும்.
அப்புறம் ஹேர் பாலீஷ் தடவி, குறிப்பிட்ட நேரம் காத்திருக்கணும்.அதுக்கடுத்து கூந்தலை அலசி, கண்டிஷனர் போட்டு, 15 நிமிஷம் விட்டுட்டு, முடி ஈரமா இருக்கிற போதே சீரம்னு சொல்ற ஒரு திரவத்தை தடவணும். நம்மூர்ல பலரும் தலை குளிக்கிறதுன்னா வெறுமனே ஷாம்பு போட்டுக் குளிக்கிறதோட சரினு நினைச்சுக்கறாங்க.
ஆனா, ஷாம்பு குளியலுக்குப் பிறகு கண்டிஷனரும், சீரமும் உபயோகிச்சாதான், கூந்தல் மிருதுவா இருக்கும். ஹேர் பாலீஷ் சிகிச்சைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை எடுக்கும். அதோட பலன் 2 மாசம் வரை நீடிக்கும். ஹேர் பாலீஷ் பண்ணிக்கிட்டவங்க, வீட்லயே அதைத் தக்க வச்சுக்க பிரத்யேக ஷாம்பு, கண்டிஷனர் உபயோகிக்கணும்.
டை உபயோகிக்கிறவங்களுக்கும், கலரிங் பண்றவங்களுக்கும் அதிக கெமிக்கல் காரணமா, முடி வறண்டு அசிங்கமா இருக்கும்.அவங்களுக்கு இந்த ஹேர் பாலீஷ் ரொம்பவே உதவியா இருக்கும். சிலருக்கு முடி நீளமா இருக்கும். நீளமான முடியா இருந்தாலும், அதை அழகா வச்சிருக்க ஹேர் பாலீஷ் பண்ணிக்கலாம். 2 மாசம் கழிச்சு, பழைய பாலீஷை எடுத்துட்டு, புதுசா பண்ணிக்கலாம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருப்புச் சாயம் (ஹேர் டை)
» ஹேர் பாலீஷ்
» இயற்கையான ஹேர் டை
» ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்
» முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல்:
» ஹேர் பாலீஷ்
» இயற்கையான ஹேர் டை
» ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்
» முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum