தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!

Go down

நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!! Empty நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!

Post  ishwarya Thu Feb 07, 2013 6:02 pm

பெண்கள் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டு அழகுபடுத்துவது பேஷனா இருந்துச்சு. அதுலயும் பிரவுன், சிவப்பு, பிங்க்ன்னு குறிப்பிட்ட நிறங்கள் மட்டுமே போட்டு வந்தாங்க. அதன்பின் கருப்பு, அடர் நீலம், கரும்பச்சை, வயலெட்... என மாறியது.

அப்படி நெயில் பாலிஷ் போட்டுட்டு இருந்த பெண்கள், பின் விரல் நகங்களில் விரும்பிய டிசைன்களை வரைய ஆரம்பிச்சு, கஷ்டப்படாம வண்ணங்கள் பூசப்பட்ட ரெடிமேட் நகங்களை வாங்கி விரல்களில் பொருத்தி வந்தாங்க. ஆனா இப்ப அதையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டுட்டு, புது ட்ரெண்ட்-ஆ போட்டோ நெயில் ஆர்ட் பக்கம் திரும்பியுள்ளனர் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாதாரணமா நெயில் ஆர்ட் அக்ரலிக் பெயிண்டால் நகத்தில் வரைவது. ஆனா போட்டோ நெயில் ஆர்ட்டில் எல்லாவற்றையும் மெஷின் பார்த்துக் கொள்ளும். அந்த ஆர்ட் மெஷினில் விரல் நகங்களை உள்ள பகுதியை வைத்து விரும்பிய டிசைனை தேர்வு செய்தால், முப்பதே வினாடியில் நகத்தில் விரும்பிய டிசைன் பதிந்துவிடும்.

இந்த மெஷினில் 3000த்துக்கும் மேற்பட்ட டிசைன்கள் இருக்கும். மேலும் இதில் ஒருவரின் போட்டோ, புடவையின் டிசைன் எதை வேண்டுமானாலும் நகத்தில் டிசைனாக போட்டுக் கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் வேண்டிய டிசைனை பென்டிரைவ் அல்லது மெமரிகார்டில் கொண்டு வந்தா போதும்.

போட்டோ நெயில் ஆர்ட் மெஷினில் டிசைன் போடும் போது முதலில் நகங்களில் வெள்ளை, கோல்டன் அல்லது சில்வர் நிற நெயில் பாலிஷ் போட்டு, அதன் மேல் விரும்பிய டிசைனை பதிவு செய்யணும். டிசைனை நகத்தில் போட்ட பிறகு டிரான்ஸ்பரன்ட் நெயில் பாலிஷ் கொண்டு நகத்தின் மேல் ஒரு கோட்டிங் கொடுத்தால், அந்த அழகான நெயில் ஆர்ட் பதினைந்து நாட்கள் வரை கலையாமல் இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum