ஹேர் பாலீஷ்
Page 1 of 1
ஹேர் பாலீஷ்
நகங்களை அழகாக, பளபளப்பாக, ஆரோக்கியமாக வைத்திருக்க நெயில் பாலீஷ் எப்படி உதவுமோ, அதே மாதிரிதான் கூந்தலுக்கு ஹேர் பாலீஷ். 18 வயசுக்கு மேல ஹேர் பாலீஷ் சிகிச்சையைப் பண்ணிக்கலாம். முதல்ல கூந்தலை அலசி, சுத்தப்படுத்தணும். அப்புறம் ஹேர் பாலீஷ் தடவி, குறிப்பிட்ட நேரம் காத்திருக்கணும். அதுக்கடுத்து கூந்தலை அலசி, கண்டிஷனர் போட்டு, 15 நிமிஷம் விட்டுட்டு, முடி ஈரமா இருக்கிற போதே சீரம்னு சொல்ற ஒரு திரவத்தை தடவணும்.
நம்மூர்ல பலரும் தலை குளிக்கிறதுன்னா வெறுமனே ஷாம்பு போட்டுக் குளிக்கிறதோட சரினு நினைச்சுக்கறாங்க. ஆனா, ஷாம்பு குளியலுக்குப் பிறகு கண்டிஷனரும், சீரமும் உபயோகிச்சாதான், கூந்தல் மிருதுவா இருக்கும். ஹேர் பாலீஷ் சிகிச்சைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை எடுக்கும். அதோட பலன் 2 மாசம் வரை நீடிக்கும். ஹேர் பாலீஷ் பண்ணிக்கிட்டவங்க, வீட்லயே அதைத் தக்க வச்சுக்க பிரத்யேக ஷாம்பு, கண்டிஷனர் உபயோகிக்கணும்.
டை உபயோகிக்கிறவங்களுக்கும், கலரிங் பண்றவங்களுக்கும் அதிக கெமிக்கல் காரணமா, முடி வறண்டு அசிங்கமா இருக்கும். அவங்களுக்கு இந்த ஹேர் பாலீஷ் ரொம்பவே உதவியா இருக்கும். சிலருக்கு முடி நீளமா இருக்கும். ஆனா, பார்க்க அழகாவே இருக்காது. இன்னும் சிலர் கொஞ்ச முடி வச்சிருந்தாலும், அதை பளபளப்பா, அடர்த்தியா வச்சிருப்பாங்க.
எவ்ளோ நீளமான முடியா இருந்தாலும், அதை அழகா வச்சிருக்க ஹேர் பாலீஷ் பண்ணிக்கலாம். 2 மாசம் கழிச்சு, பழைய பாலீஷை எடுத்துட்டு, புதுசா பண்ணிக்கலாம். பார்ட்டிக்கு போறவங்க, மணப்பெண்கள் மத்தில இது ரொம்ப பிரபலமாயிட்டு வருது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருப்புச் சாயம் (ஹேர் டை)
» ஹேர் பாலீஷ்
» இயற்கையான ஹேர் டை
» ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்
» கூந்தலுக்கு எமனாகும் ஹேர் ட்ரையர்
» ஹேர் பாலீஷ்
» இயற்கையான ஹேர் டை
» ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்
» கூந்தலுக்கு எமனாகும் ஹேர் ட்ரையர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum