தூள் கிளப்புது துப்பட்டா மாஸ்க்!
Page 1 of 1
தூள் கிளப்புது துப்பட்டா மாஸ்க்!
கொள்ளையடிப்பது வங்கியோ, மனதோ... இரண்டுக்கும் காஸ்ட்யூம் ஒன்றுதான் போலிருக்கிறது. மாஃபியா, மாவோயிஸ்ட் ரேஞ்சுக்கு முகம் முழுக்க மாஸ்க் போட்டு பறக்கும் டூவீலர் பெண்களைத்தான் சொல்றோம்ங்க. ஒரே துப்பட்டா... அதில்தான் எத்தனை விதமாக முகமூடி செய்து அணிகிறார்கள் இவர்கள்! வெயில், பனி, தூசு, ஆண்களின் பார்வை என்று அனைத்து அட்டாக்கிலிருந்தும் பாதுகாக்கும் கேடயம். எப்படி செய்கிறார்கள் இந்த ‘துப்பட்டா கவரேஜை’? கல்லூரிகளில் இன்வெஸ்டிகேஷனைத் தொடங்கினோம்...
‘‘நாங்க ஒண்ணும் இதை பந்தாவுக்காக செய்யல... பந்தோபஸ்துக்காகத்தான். வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வீட்ல கிளம்பி, சென்னை தூசியால பாலா பட ஹீரோ மாதிரி போய் காலேஜ்ல நிப்பாங்க பசங்க. நம்மளால அப்படி அழுக்கா திரிய முடியுமா?’’ என்றது ஒரு ஸ்டெல்லா மேரி ஆங்கிரி பேர்ட்.
‘‘ஸ்கின் அலர்ஜியும் சீரியஸான விஷயம்ங்க. ‘வெயில்ல யு.வி இருக்கு... ஆவி இருக்கு’ன்றாங்க. அதனால இது ஒரு மெடிக்கல் முன் எச்சரிக்கைன்னும் சொல்லலாம். மாஸ்க்கா யூஸ் பண்றதுக்காகவே இப்பல்லாம் கடையில ஸ்பெஷல் துப்பட்டா வந்துடுச்சுன்னா பார்த்துக்குங்க. துப்பட்டா மட்டுமில்லாம, நிறைய பேர் கைக்கும் ஒரு கிளவுஸ் போட்டுக்குவோம்.
துப்பட்டாவுலயே சுடிதாரை ஃபுல் கவரேஜ் பண்ணிடலாம்னாலும் சில பேர் அப்பா சட்டை, அண்ணன் சட்டையை மேலாக்கப் போட்டுட்டு வர்றதும் உண்டு. அழகுப் பராமரிப்பும் ஆச்சு. துப்பட்டா காத்துல பறக்காம சேஃப்க்கு சேஃப்டியும் ஆச்சு’’ என்றது அண்ணா ஆதர்ஷ் குயிலொன்று. ‘‘லைவ் டெமோ பாக்கறீங்களா?’’ என்று செயலில் இறங்கியது எத்திராஜ் கேங்...
‘‘இதுல முகம் மட்டும் மறைக்கிறது, தலையையும் சேர்த்து மறைக்கிறது, சுடிதார் முழுக்க ஸ்லீவ்ஸ் வரைக்கும் கவர் பண்றதுன்னு நிறைய வெரைட்டி இருக்கு. சில பேர் லைட்டா அங்கங்க சொருகிட்டு மேல ஹெல்மெட் போட்டு மேனேஜ் பண்ணிக்குவாங்க. ஹெல்மெட் போடாதவங்க, பிடிச்சி இழுத்தாலும் வராத மாதிரி டைட்டா கட்டணும். இதுக்குன்னே ரெண்டு பக்கமும் வெயிட் வச்சு வர்ற ஸ்பெஷல் துப்பட்டா இருக்கு. அது இருந்தால் கட்டவோ, சொருகவோ தேவையில்ல.
அப்படியே முகத்தை மறைச்சு முன்னாடி இழுத்து விட்டுக்கிட்டா போதும்... அதோட வெயிட்டாலயே அசையாம நின்னுக்கும்’’ - முழு டெமோவையும் உங்களுக்கும் எங்களுக்கும் வழங்கியவர் டிம்பிள் அண்டு ரேபா. நேத்து வரைக்கும் புடவை கட்டத் தெரியலைன்னு கிண்டலடிச்சிட்டிருந்தோம். ஆனா இந்தப் பொண்ணுங்ககிட்டயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பட்டா நெக்லஸ்!
» நறுமணத் தூள்
» வழு வழு முகத்திற்கு வாழைப்பழ மாஸ்க்!
» முட்டைக்கோஸ் தூள் பக்கோடா
» மாஸ்க் போட்டு முகத்தை பொலிவாக்குங்க!
» நறுமணத் தூள்
» வழு வழு முகத்திற்கு வாழைப்பழ மாஸ்க்!
» முட்டைக்கோஸ் தூள் பக்கோடா
» மாஸ்க் போட்டு முகத்தை பொலிவாக்குங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum