மாஸ்க் போட்டு முகத்தை பொலிவாக்குங்க!
Page 1 of 1
மாஸ்க் போட்டு முகத்தை பொலிவாக்குங்க!
Face Mask Tips
முக அழகை பாதுகாக்க இன்றைக்கு எத்தனையோ ரசாயனங்கள் அடங்கிய அழகு சாதன கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை எல்லாம் விட இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போடுவது முகப் பொலிவை தக்கவைக்கும். இளமையை மீட்டெடுக்கும்.
பழங்கள் காய்கறிகளைக்கொண்டு போடப்படும் மாஸ்க்கினால் எவ்விதமான சரும பிரச்சினையும் ஏற்படாது. ஆனால் இதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும். இது முகப் பொலிவைக் கொண்டு வருவதுடன் ஒரு வெளிப்படையான நிற மாறுதலையும் கொண்டு வரும். இதனால் உங்கள் முகத்தில் ஒரு மென்மையையும் புத்துயிரையும் கொடுக்கும். இதனை சரியாக மற்றும் பொருத்தமான அளவில் பயன்படுத்துவதால் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது நீங்குகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
தக்காளி மாஸ்க்
எண்ணெய் பசை உள்ள சருமத்தினருக்கு தக்காளி மாஸ்க் சரியானது. தக்காளியை நன்கு மசித்து முகத்தில் 30 நிமிடத்திற்கு காயவைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். தேவையான அளவு எண்ணெய் பசை மட்டுமே முகத்தில் இருக்கும். சருமம் குளுமையாக மாறுவதோடு பளிச் என்று ஆகும்.
வாழைப்பழம் மாஸ்க்
நன்றாக கனிந்த வாழைப்பழத்துடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்று பிசையவும். அதை முகத்தில் பூசி மாஸ்க் போடவும். நன்றாக உலர்ந்த பின்பு உரித்து எடுத்துவிட்டு பின் வெந்நீரில் துண்டை நனைத்து முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கவும். இந்த மாஸ்க் மாதம் இருமுறை போடலாம். முகம் சுருக்கமின்றி இளமை திரும்பும்.
தேன் மாஸ்க்
இரண்டு ஸ்பூன் தேன் எடுத்துக்கொண்டு அதை நன்றாக முகத்தில் பூசி காயவைக்கவும். நன்றாக உலர்ந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவவும்.
மாஸ்க் எப்படி போடலாம்
மாஸ்க் தடவுவதற்கு முன்பு தலை முடியை கெட்டியாக முடிந்து கொள்ளவும். தூய்மையான நீரைக் கொண்டு நன்றாக முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரம் மற்றும் மிருதுவான பிரஷ்ஷை உபயோகிக்கவும். மாஸ்கை முகத்தின் மென்மையான பாகங்களான கண்களின் ஓரம், இமைகள் மற்றும் உதடுகள் ஆகியவற்றில் தடவுவதை தவிர்க்கவும். மாஸ்க் தடவிய பிறகு குறைந்தது அரை மணி நேரம் காய வைக்கவும்.
மாஸ்கை அகற்றும் போது கவனத்துடன் அகற்றவும். மீண்டும் தூய்மையான நீரால் நன்றாக முகத்தைத் துடைத்துக் கழுவவும்.
மாஸ்கை போடும் போதும் சரி அகற்றும் போதும் சரி எவ்விதமான பரபரப்பும் வேண்டாம். நிதானமாக செய்யவும். அரை மணி நேரம் காய வைப்பதை அதிகரிக்கவும் வேண்டாம். சுருக்கவும் வேண்டாம். சரியாக அரை மணி நேரம் கழித்து அகற்றவேண்டும். அப்பொழுதுதான் மாஸ்க் போட்டதன் பலன் கிடைக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். எளிமையான அதிக செலவில்லாத இந்த மாஸ்க்கினை நீங்களும் முயற்சி செய்து பருங்களேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..?
» முகத்தை பாதுகாக்கும் முறைகள்
» முகத்தை பொலிவாக வைத்திருக்க
» முகத்தை ஒழுங்க கழுவுறீங்களா..?
» முகத்தை ஒழுங்க கழுவுறீங்களா..?
» முகத்தை பாதுகாக்கும் முறைகள்
» முகத்தை பொலிவாக வைத்திருக்க
» முகத்தை ஒழுங்க கழுவுறீங்களா..?
» முகத்தை ஒழுங்க கழுவுறீங்களா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum