துப்பட்டா நெக்லஸ்!
Page 1 of 1
துப்பட்டா நெக்லஸ்!
‘பூர்ணிமா பாக்யராஜ் - பாக்யராஜ்’ என நட்சத்திர தம்பதியின் மகளாக, ஒரு நடிகையாக நமக்கெல்லாம் பரிச்சயமானவர் சரண்யா பாக்யராஜ். ‘பாரிஜாதம்’ படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவரை, ஒரு சில படங்களுக்குப் பிறகு காணோம்.என்னாச்சு?
‘‘ஜுவல்லரி டிசைனிங்ல செம பிஸியா இருக்கேன். அதான் விஷயம்...’’ - கண்கள் விரியச் சிரிக்கிறார் சரண்யா. ‘‘நடிக்க வர்றதுக்கு முன்னாடியே எனக்கு க்ரியேட்டிவான விஷயங்கள் செய்யறதுலதான் ஆர்வம் அதிகம். சென்னையில டிகிரி முடிச்ச உடனே, ஃபேஷன் கம்யூனிகேஷன் படிக்க லண்டன் போயிருக்க வேண்டியது. அதுக்குள்ள நடிக்க வந்துட்டதால ரெண்டு வருஷம் லேட்.
சென்னையிலயும் லண்டன்லயும் ஜுவல்லரி டிசைனிங் பத்திப் படிச்சேன். எனக்குப் பிடிச்ச விஷயத்தை சந்தோஷமா பண்ணிட்டிருக்கேன்’’ என்கிறார்.
வீட்டுக்கு வீடு, கல்லூரிக்கு கல்லூரி ஜுவல்லரி டிசைனர்கள் இருக்கிறார்கள் இன்று. அவர்களிடமிருந்து சரண்யா தனித்து நிற்கக் காரணம் அவரது க்ரியேட்டிவிட்டி. ‘‘ஜுவல்லரி டிசைனிங் பண்ண ஆரம்பிக்கும்போதே, நான் பண்றது தனித்தன்மையோட இருக்கணுங்கிறதுல தெளிவா இருந்தேன்.
அப்படி யோசிக்கறதுதான் என்னோட ‘டிரெஷர் கலெக்ஷன்’. இதுல எல்லாம் கூட நகைகள் பண்ண முடியுமான்னு ஒருத்தரை யோசிக்க வைக்கிற வித்தியாசமான பொருள்களை எல்லாம் உபயோகிச்சு டிசைன் பண்ணுவேன். உதாரணத்துக்கு ஸிப் ரன்னர், ஷூ பக்கிள், பழைய காலத்து நாணயம், பட்டன், லெதர்... இப்படி என் கண்களுக்குத் தெரியற எந்தப் பொருளையும் வச்சு என்னால நகையை உருவாக்க முடியும்...’’ - சவாலாகச் சொல்கிற சரண்யாவின் டிசைன்களுக்கு அவரது அம்மாதான் முதல் ரசிகையாம்.
‘‘காலேஜ் படிக்கிறப்ப முதல் முதல்ல ஒரு புராஜெக்ட்டுக்காக இயர் ரிங் செட் பண்ணினேன். அது பார்க்கவே ரொம்ப வேடிக்கையா, ஒரு குழந்தை பண்ணின மாதிரி இருக்கும். யாருக்குமே அது பிடிச்சிருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா, எங்கம்மா ஸோ ஸ்வீட். அதை ஆசையா போட்டுக்கிட்டு, வெளியே போயிட்டு வந்தாங்க. ‘ரொம்பப் பிடிச்சிருக்கு’ன்னு சொல்லி என்கரேஜ் பண்ணினாங்க. அவங்க கொடுத்த ஊக்கத்துலதான் நான் இவ்ளோ தூரம் வந்திருக்கேன்னு சொல்லணும்.
இப்பவும் அம்மாவுக்கு நான்தான் ஜுவல்லரி டிசைன் பண்ணிக் கொடுப்பேன். எங்கே வெளியே போனாலும் நான் டிசைன் பண்ணினதைத்தான் போட்டுக்கிட்டுப் போவாங்க. வெளியே கிளம்பறதுக்கு முன்னாடி வந்து, ‘எனக்கு சுடச்சுட இந்த டிரெஸ்சுக்கு மேட்ச்சா ஒரு செட் பண்ணிக் கொடு’ன்னு கேட்பாங்க...’’ - அம்மா புராணம் பாடுபவருக்கு, நடிகைகள் ராதிகா, சுஹாசினி, லிசி பிரியதர்ஷன், சுகன்யா, மீனா, சாந்தினி, சந்தியா என வி.ஐ.பி. வாடிக்கையாளர்கள் எக்கச்சக்கம்.
சரண்யாவின் டிசைன்களில் ஹைலைட் அவரது ‘டிசைனர் துப்பட்டா நெக்லஸ்’. ‘‘என்னோட இந்த டிசைனர் துப்பட்டா நெக்லஸை கழுத்தைச் சுத்திப் போட்டுக்கிட்டீங்கன்னா, நீங்க நிஜமான நெக்லஸ் போட்ட மாதிரியே இருக்கும். கழுத்துக்கு வேற நகையே தேவைப்படாது. நிறைய பேர் இதை விரும்பி ஆர்டர் கொடுக்கிறாங்க...
விதம் விதமா நகைகள் டிசைன் பண்றேனே தவிர, எனக்குத் தனிப்பட்ட முறையில பெரிசா நகைகள் போடப் பிடிக்காது. ஆனா, துப்பட்டா நெக்லஸை மட்டும் விரும்பி போட்டுப்பேன்...’’ - ஆர்வம் கிளப்புகிறது சரண்யாவின் பேச்சு. சினிமா பத்தி மறுபரிசீலனை பண்ற ஐடியா இருக்கா சரண்யா?
‘‘இப்போதைக்கு ஜுவல்லரி டிசைனிங்ல பிஸியா இருக்கேன். ஆன்லைன்ல விற்பனை பிரமாதமா போயிட்டிருக்கு. சினிமா வேண்டாம்னு நான் என்னிக்குமே சொல்லலை. இன்ட்ரஸ்ட்டிங்கான வாய்ப்பு ஏதாவது வந்தா யோசிக்கலாம்...’’

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum