முட்டைக்கோஸ் தூள் பக்கோடா
Page 1 of 1
முட்டைக்கோஸ் தூள் பக்கோடா
வழக்கமான பக்கோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பக்கோடா செய்து சாப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். சத்தானதும்கூட. செய்முறை இதோ.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சைக்கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
பூண்டு – 2 பல்
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு கைப்பிடி
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
* முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், பச்சைக் கொத்தமல்லி தழை இவைகளை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.
* கடலை மாவு, அரிசி மாவுடன், நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்க்கவும். இந்தக்கலவையில் சோடா உப்பை தெளித்தாற்போல் விட்டு கிளறிக் கொள்ளவும்.
* சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணையை பக்கோடா மாவில் ஊற்றி பிசையவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொறுமொறுவென பொன்னிறமானதும் எடுக்கவும்.
* மாலைநேர சிற்றுண்டிக்கு ஏற்ற பலகாரம் இது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum