நடிகை மானுவின் இளமை ரகசியம் என்ன?
Page 1 of 1
நடிகை மானுவின் இளமை ரகசியம் என்ன?
‘காதல் மன்னன்’ படம் ரிலீசாகி 15 வருடங்களாகப் போகிறது. அதன் ஹீரோயின் மானுவோ 15 வயது குறைந்த மாதிரி இருக்கிறார். இப்போதும்
ஹீரோயினாக நடிக்கலாம்... கல்யாணத்துக்குப் பிறகும் அத்தனை அழகாக, இளமையாக இருக்கிறார் ‘காதல் மன்னன்’ கண்ணழகி.
என்ன மேஜிக் மானு?
‘‘கல்யாணத்துக்குப் பிறகு எல்லா பெண்களுக்குமே லைஃப்ஸ்டைல் மாறும். அதுவரை இஷ்டத்துக்கும் ஓடியாடிக்கிட்டிருந்தவங்க, திடீர்னு அமைதியாயிடுவாங்க. அலைச்சல் குறையும். நிறைய நேரம் வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டி வரும். தன்னையும் அறியாம நிறைய சாப்பிடுவாங்க. அதனாலயே பல பெண்களுக்கு கல்யாணத்துக்குப் பிறகு வெயிட் போடுது. ஆனா அதுவே, வெயிட் போடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கிறவங்க கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, பிறகும் சரி, அப்படியே இருக்காங்க...
இன்னும் சொல்லப் போனா, சந்தோஷமான கல்யாண வாழ்க்கை அமையற பெண்களுக்கு, முகத்துல ஒரு அழகும் பளபளப்பும் கூடறதைப் பார்க்கலாம், என்னை மாதிரியே...’’ - கண் சிமிட்டிச் சிரிக்கிற மானு, நடிப்பிலிருந்து விலகிய பிறகு நடனத்தில் பிஸி. எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க, நடனப் பயிற்சியை மட்டுமே நம்புவதில்லையாம் இவர்.
பிறகு?
‘‘தினமும் ஜிம் போக முடியாது. ஒருநாள் விட்டு ஒரு நாள் போவேன். மற்ற நாள்கள்ல யோகா பண்ணுவேன். எனக்கு தினம் தியானமும் சூர்யநமஸ்காரமும் பிராணாயாமமும் பண்ணியாகணும். உடம்பு இறுக்கமாயிட்டா, அப்புறம் உடம்புல சேர்ந்த கொழுப்பு வெளியேறாது. நம்ம சொல்றபடியெல்லாம் வளைஞ்சு கொடுக்கற கண்டிஷன்ல உடம்பு இருந்தால்தான், கொழுப்பும் சேராது. இளமையாகவும் தெரிவீங்க... அதுக்கு யோகாதான் சரியான சாய்ஸ்.
நேரம் கிடைக்கிறபோதெல்லாம் ஸ்விம் பண்ணுவேன். உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரைக்கும், ஒட்டுமொத்த உடம்புக்குமான எக்சர்சைஸ்னா அது ஸ்விம்மிங்தான். தவிர சுவாசம் சீராகி, ஒருத்தரோட நுரையீரல் நல்லா வேலை செய்யவும் அது உதவி செய்யும். உள் உறுப்புகளுக்கும் நல்லது’’ என்கிறவர், உடற்பயிற்சிக்கு இணையாக உணவுக்கட்டுப்பாட்டையும் நம்புகிறார். ‘‘காலைல எழுந்ததும் முதல் வேலையா வெந்நீர் குடிப்பேன். அது நம்ம உடம்பை சுத்தம் செய்யும். வெஜிடேரியன் சாப்பாடுதான் என் ஃபேவரைட். முட்டை மட்டும் விதிவிலக்கு. காலை சாப்பாட்டுக்கு பிரெட் ஆம்லட் இல்லைன்னா 2 ஸ்லைஸ் பிரெட், கூட கொஞ்சம் வெண்ணெய் இல்லைன்னா ஒரு கப் கார்ன்ஃபிளேக்ஸ் எடுத்துப்பேன். வழக்கமான இட்லி, தோசை பக்கமெல்லாம் திரும்பறதே இல்லை.
ஆரோக்கியத்துக்கும் அதிக எடைக்கும் வித்தியாசம் 40 சதவிகிதம் அதிக உடற்பயிற்சிதான். கொஞ்சம் திட்டமிட்டுச் செயல்பட்டால் ஸ்லிம் ஆவது நிச்சயம்!
சில மணி நேரங்களுக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லதொரு முறை. முயற்சித்துப் பாருங்கள்.
மதிய உணவும் லைட்டாதான் இருக்கணும் எனக்கு. ஞாயிற்றுக்கிழமைகள்ல மட்டும்தான் அரிசி சாதம். மற்ற 6 நாள்களும் மதியத்துக்கு நிறைய காய்கறி, கொஞ்சம் தயிர், பிரெட் அல்லது சப்பாத்தி. சப்பாத்தி, தால், சாலட்னு சிம்பிள் மெனுவோட சாயந்திரம் 6:30 டூ 7 மணிக்குள்ள என்னோட டின்னர் முடிஞ்சிடும். நைட் படுக்கறதுக்கு முன்னாடி ஏதாவது ஒரு பழம் அல்லது கொஞ்சம் பால்... பொதுவா எல்லாரும் நிறைய ஜூஸ் குடிக்கச் சொல்வாங்க. ஜூஸா குடிக்கிறபோது, அதுல சேர்க்கிற எக்ஸ்ட்ரா சர்க்கரை, உடம்புக்கு நல்லதில்லைங்கிறதால என் லிஸ்ட்டுல அது இல்லை. இதுதான் என் ரொட்டீன்.
சமையலுக்கு ஆள் வச்சுக்கலை. நானேதான் சமைப்பேன். என் ஹஸ்பெண்ட் கேன்சர் சர்ஜன். ஹெல்த் விஷயத்துல என்னைவிட அவர் இன்னும் அக்கறையா இருப்பார். எண்ணெய் இல்லாத சமையல் என் ஸ்பெஷல். எந்த மாதிரி அயிட்டத்தையும் எண்ணெயே இல்லாம சமைச்சிடுவேன்.
மீடியாவுல இருக்கிறதால, அடிக்கடி பார்ட்டி போக வேண்டியிருக்கும். அப்படிப் போகறப்ப, நல்லா... ஆனா, ஹெல்தியா சாப்பிடுவேன். டயட்டுங்கிற பேர்ல, எந் நேரமும் எல்லாத்தையும் ஒதுக்கிட்டே இருந்தோம்னா, ஒரு கட்டத்துல மன உளைச்சல் வந்துடும். அதோட பாதிப்புல திடீர்னு நிறைய சாப்பிட ஆரம்பிச்சிடுவோம். அந்தத் தப்பை நான் பண்றதில்லை.
பெண்களோட ஆரோக்கியத்துக்கும் இளமைக்கும் மூணு விஷயங்கள் அவசியம். போதுமான தூக்கம்.... அப்புறம் கால்சியம் மற்றும் மல்ட்டி வைட்டமின்... மூணாவதா சுத்தம். கடைசியா ஒரே ஒரு ரகசியம் சொல்லட்டா? உங்களுக்கு எது சந்தோஷத்தையும் மன அமைதியையும் கொடுக்குதோ, அதை நினைச்சுக்கிட்டே ராத்திரி தூங்கப் போங்க. காலைல உங்க முகத்துல வழக்கத்துக்கு மாறான ஒரு புது அழகைப் பார்ப்பீங்க... ட்ரை பண்ணிப் பாருங்க!’’ ஆரோக்கியத்தில் ஆரம்பித்து, அழகு ரகசியத்துடன் முடிக்கிறார் மானு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை உமா ரியாஸ்கானின் அழகு ரகசியம் என்ன?
» நடிகை த்ரிஷாவின் அழகு ரகசியம் என்ன?
» இளமை ரகசியம்!
» இரம் அலியின் அழகு ரகசியம் என்ன?
» சொக்க வைக்கும் சோனியாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum