சொக்க வைக்கும் சோனியாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன?
Page 1 of 1

நடிகைகளின் செகன்ட் இன்னிங்ஸ் பெரும்பாலும் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில்தான் தொடங்கும். அதற்கேற்றபடி அவர்களும் எக்குத்தப்பாக உடல் பெருத்து, அடையாளமே தெரியாமல் மாறிப் போன பிறகே இரண்டாவது ரவுண்டில் அடியெடுத்து வைப்பார்கள். விதிவிலக்குகளை விரல் விடாமலேயே எண்ணி விடலாம். அப்படி ஒருவர் சோனியா அகர்வால். ஹீரோயினாக அறிமுகமானதில் இருந்து, நடுவில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி ஆகி, மீண்டும் பிசியாகியிருக்கும் சோனியா எப்போதும் சொக்க வைக்கும் சோனியா!
என்ன ரகசியம் மேடம்?
‘‘என்னால எது இல்லாமலும் இருக்க முடியும். எக்சர்சைஸ் பண்ணாம மட்டும் இருக்கவே முடியாது. ஆனா, ஷூட்டிங் இருக்கிற நாள்ல ஒர்க் அவுட் பண்ண முடியாது. அந்த மாதிரி டைம்ல நான் சாப்பாட்டுல கட்டுப்பாடா இருப்பேன். நல்லா சாப்பிட்டு, அதுக்கேத்தபடி எக்சர்சைஸ் பண்றது
ஒரு வகை. எக்சர்சைஸ் பண்ண முடியாதப்ப, சாப்பாட்டுல கவனமா இருக்கிறது இன்னொரு வகை. இந்த ரெண்டும்தான் என்னோட ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்’’ என்கிற சோனியா, தினசரி குறைந்தது 1 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்கிறார்.
வாக்கிங், கார்டியோ என அதில் எல்லாம் அடக்கமாம். ‘‘திடீர்னு ஒரு பீரியட்ல நான் கொஞ்சம் வெயிட் போட்டேன். ‘ஆஹா இது சரியில்லையேன்னு மனசுக்குள்ள மணியடிச்சது. சாதம், சப்பாத்தின்னு கார்போஹைட்ரேட் சாப்பாட்டை அப்படியே ஒதுக்கிட்டு, சூப், சாலட், கிரில்டு ஃபிஷ், கிரில்டு சிக்கன்னு இறங்கி, எக்ஸ்ட்ரா வெயிட் குறைச்சேன். ‘அதெப்படி சினிமாக்காரங்களால மட்டும் நினைச்சா வெயிட் போட முடியுது, நினைச்சா குறைக்க முடியுது’ங்கிற கேள்வி சாமானிய மக்கள் பலருக்கும் இருக்கும்.
எக்சர்சைஸ் பண்றதோ, டயட்ல இருக்கிறதோ ஒரு நாள் ராத்திரிலயே பலன் கொடுக்கிற மேஜிக் இல்லை. அது கொஞ்சம் கொஞ்சமாதான் தன்னோட பலன்களைக் காட்டும். அதை உணர ஆரம்பிக்கிறதுக்குள்ளயே பல பேர், அலுத்து, சலிச்சு, விட்ருவாங்க. ஒரு லட்சியத்தோட எக்சர்சைஸ் பண்றவங்களால மட்டும்தான், உடம்புல இன்ச் இன்ச்சா குறையறதை உணர முடியும்...’’ - பல்லாயிரம் மக்களின் புதிர்கேள்விக்கு சோனியாவின் தெளிவான பதில் இது.
மீடியா வெளிச்சத்தில் இருப்போருக்கு பார்ட்டி, பப், கேளிக்கை, கொண்டாட்டங்களுக்குக் குறைவே இருக்காது. செல்லுமிடங்களில் எல்லாம் விதம் விதமாக வரவேற்கும் விருந்து... ‘வேண்டாம், தொடாதே’ என மனசு சொன்னாலும், நாக்கு கேட்காது. இந்த விஷயத்தில் சோனியா எப்படி?
‘‘பார்ட்டிக்கு போனா கண்டதையும் சாப்பிட வேண்டியிருக்கும்னு நான் அங்கல்லாம் போறதே இல்லைன்னு நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். ஃபிட்டா இருக்கணுங்கிற ஒரே காரணத்துக்காக, நம்ம லைஃப் ஸ்டைலை மாத்திக்கவோ, தியாகம் பண்ணவோ முடியாது.
நான் என் வாழ்க்கைல அப்படி சின்னச் சின்ன சந்தோஷங்களை விட்டுக் கொடுக்கறதில்லை. பார்ட்டிக்கு போனா, நல்லா சாப்பிடுவேன். அதுக்கு முன்னாடி மனசுக்குள்ள ஒரு பிராமிஸ் பண்ணிப்பேன்... ‘வழக்கமா ஒரு மணி நேரம் எக்சர்சைஸ்னா, பார்ட்டிக்கு போன அடுத்த நாள் ரெண்டு மணி நேரம்’னு சொல்லிட்டுத்தான் சாப்பாட்டுல கையை வைப்பேன். எனக்கு நான் செய்துக்கிட்ட பிராமிஸை மீறவும் மாட்டேன். ஒரு கிலோ வெயிட் ஏறினாலும், அதை என் முகம் காட்டிக் கொடுத்துடும். கொழுகொழு முகவாகு அழகு. அதே நேரம் அதிகமான கொழுகொழு முகமும் நல்லாருக்காது.
இயற்கையா கடவுள் எனக்குக் கொடுத்த அந்த அழகை, வெயிட் போட்டு கெடுத்துக்கறதுல எனக்கு உடன்பாடே இல்லை’’ என்பவர், தோழிகளுக்கு ஃபிட்னஸ் டிப்ஸும் தருகிறார்.
‘நிறைய தண்ணீர் குடிங்க. அதுதான் உங்க ஸ்கின்னை அழகாக்கும். ஃப்ரெஷ் ஜூஸ், சூப் நிறைய குடிக்கலாம். ‘ஜூஸை விட சூப் பெட்டர்னு என்னோட ஃபிட்னஸ் ட்ரெயினர் அஜீத் அடிக்கடி சொல்வார். எனக்கு எங்கேயாவது பாட்டில் ட்ரிங்க்ஸ் கொடுத்தா வேணாம்னு சொல்லிடுவேன். அந்த மாதிரி இடங்கள்ல ஃப்ரெஷ் ஜூஸ்தான் என் சாய்ஸ். குறிப்பா தர்பூசணி ஜூஸ். எப்போ, எங்கே, என்ன சாப்பிடணும்னு தெரிஞ்சுக்கறது, ஆரோக்கியத்துக்கு அவசியமான தகவல்.
எக்கச்சக்க மசாலா, கன்னாபின்னான்னு வெண்ணெய், நெய் சேர்த்த பஞ்சாபி சாப்பாடுன்னா ஒரு காலத்துல எனக்கு அவ்ளோ இஷ்டம். நடிகையான பிறகு அதெல்லாம் கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். மதிய நேரத்துல எப்பவாவது கொஞ்சம் எடுத்துக்கிறதோட சரி...’’ - வார்த்தைகளுக்கு மேக்கப் இல்லாமல் பேசுகிறவருக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. ‘‘62 கிலோவா இருந்த நான், இப்ப 56 கிலோவுக்கு வந்திருக்கேன். அது போதாது... 54தான் என் இலக்கு. அடுத்த முறை சந்திக்கிறப்ப, நீங்களே சொல்வீங்க...’’நம்பிக்கையுடன் சொல்கிறார் மென்சிரிப்பழகி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை உமா ரியாஸ்கானின் அழகு ரகசியம் என்ன?
» அது என்ன `சிதம்பர ரகசியம்'?
» அது என்ன `சிதம்பர ரகசியம்'?
» ஸ்லிம்ரன்னின் ஸ்லிம் ரகசியம் என்ன!
» நடிகை மானுவின் இளமை ரகசியம் என்ன?
» அது என்ன `சிதம்பர ரகசியம்'?
» அது என்ன `சிதம்பர ரகசியம்'?
» ஸ்லிம்ரன்னின் ஸ்லிம் ரகசியம் என்ன!
» நடிகை மானுவின் இளமை ரகசியம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum