நடிகை உமா ரியாஸ்கானின் அழகு ரகசியம் என்ன?
Page 1 of 1

Youth has no age! நடிகை உமா ரியாஸை பார்க்கும் போது, உண்மையாகிறது இந்த வாசகம். பிளஸ் டூ படிக்கிற பையனுக்கு அம்மா என்றால் நம்ப முடியவில்லை! இளமையின் ரகசியம் கேட்டால் சிரிப்பையே பதிலாகத் தருகிறார் உமா. நிஜமாகவே அதுதான் அவரது இளமையின் ரகசியமாம்!
‘‘நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும், அதாங்க உண்மை. எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா, எப்போதும் இளமையாவும் இருப்பீங்க... செலவே இல்லாத, சிம்பிளான டெக்னிக்...’’ - மறுபடி சிரிக்கிறவரிடம் சீரியஸாக சில டிப்ஸ் கேட்டோம்.
‘‘ஒல்லியான உடல்வாகுங்கிறது எனக்கு பரம்பரையா அமைஞ்சது. அதுக்காக என்ன வேணா சாப்பிடறது, எப்படி வேணா இருக்கிறதுன்னு என் உடம்புக்கும் ஆரோக்கியத்துக்கும் நான் துரோகம் நினைச்சதில்லை. கடவுள் கொடுத்த இளமையையும் ஆரோக்கியத்தையும் காப்பாத்திக்கறதுக்கான சின்னச் சின்ன முயற்சிகளை சரியா பண்ணிட்டிருக்கேன்... அவ்வளவுதான்’’ என்கிறவர் அப்படி என்ன முயற்சிகளைச் செய்கிறார்?
‘‘என் ஹஸ்பெண்ட் ரியாஸ்கான், ஃபிட்னஸ் விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். எக்சர்சைஸ் பண்றதுங்கிறது அவருக்கு பல் தேய்க்கிறது, குளிக்கிறது மாதிரி... ஒருநாள் கூட மிஸ் பண்ண மாட்டார். ஆனா, நான் அந்த விஷயத்துல ரொம்ப சோம்பேறி.
எக்சர்சைஸ் மூலம் சாதிக்க முடியாததை, சாப்பாடு மூலமா சரிகட்டிடுவேன். எல்லாரும் சொல்றதுதான்... காலைச் சாப்பாடு நல்லா சாப்பிடுவேன். மதியம் கொஞ்சம் கம்மியாகும். ராத்திரி அதைவிடக் குறையும். சாதத்தோட அளவு கம்மியாகவும், காய்கறி, பழங்களோட அளவு அதிகமாகவும் இருக்கற மாதிரி பார்த்துப்பேன்.
எப்போதும் சுறுசுறுப்பா இருப்பேன். மதியத் தூக்கம் கிடையாது. ராத்திரில, தூங்கப் போறதுக்கு 2 மணி நேரம் முன்னாடி சாப்பாட்டை முடிச்சிடுவேன். இடையில நொறுக்குத்தீனி சாப்பிடற பழக்கமே கிடையாது. தாகம் எடுத்தா மட்டும் தண்ணி குடிக்காம, எப்பல்லாம் தோணுதோ, அப்பல்லாம் தண்ணி குடிப்பேன். நிறைய நிறைய தண்ணீர் குடிக்கிறதால, உடம்புல எந்தவிதமான நச்சுப்பொருளும் தங்காது. ஒரே மாசத்துல உங்க ஸ்கின்கூட பளபளப்பா, கண்ணாடி மாதிரி மாறும். ட்ரை பண்ணிப் பாருங்க...
என் முதல் பையன் பிறந்தப்ப நானும் எக்கச்சக்கமா வெயிட் போட்டேன். ஒரு வருஷத்துல பழைய படி மாறினேன். குழந்தை பெத்த எல்லாப் பெண்களுக்கும் அந்த நேரத்துல எடை கொஞ்சம் அதிகரிக்கும். அதை அலட்சியப்படுத்தினா, பிறகு குறைக்கிறது சிரமம். ‘குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடணும்’னு சொல்லிச் சொல்லி, கர்ப்ப காலத்துலயும், ‘பச்சை உடம்பு’ன்னு சொல்லி குழந்தை பிறந்த பிறகும் நம்ம உடம்புக்குள்ள போன அதிகப்படியான கொழுப்பை குறைச்சாகணும்.
ஜிம்முக்கு போனாதான் எடை குறையும்னு அர்த்தமில்லை. யாருக்கு எந்த மாதிரியான எக்சர்சைஸ் சாத்தியமோ அதைப் பண்ணலாம். நான் ஜிம்முக்கெல்லாம் போறதில்லை. நிறைய டான்ஸ் பண்ணுவேன். முடியற போதெல்லாம் சைக்கிளிங், ஜாகிங் பண்ணுவேன். என்னைப் பொறுத்த வரை ஸ்லிம்மா இருக்கிறது ரொம்ப சிம்பிள்...’’ என்பவர், அழகும் இளமையும் நாம் உண்கிற உணவுகளின் பிரதிபலிப்பு என்பதை அழுத்தமாக நம்புகிறார்.
‘‘அதை அனுபவ ரீதியா உணர்ந்திட்டிருக்கிறவ நான். என்னைப் பார்க்கிறவங்க பலரும், ‘அப்படி என்னதான் கிரீம் யூஸ் பண்றீங்க? எங்கே ஃபேஷியல் பண்றீங்க’ன்னு கேட்கறதுண்டு. சொன்னா நம்புவீங்களா...
நான் ஃபேஷியல் பண்ணிப் பல வருஷங்களாச்சு. தினம் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுவேன். ஜூஸா முடியலைன்னா, அப்படியே சாப்பிட்ருவேன். மாதுளம் பழம் இல்லாம எனக்குப் பொழுதே விடியாது. பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம் இது. இரும்புச்சத்துக்கும் உதவும். ஸ்கின்னும் நாளுக்கு நாள் பளபளப்பா, சுருக்கங்கள் இல்லாம இருக்கும். மாதுளம் பழம் கிடைக்காத நாள்ல கொய்யா. மலச்சிக்கல் இல்லாமப் பார்த்துக்கும்.
என்ன கவலையா இருந்தாலும், வீட்டு வாசலைத் தாண்டிட்டா, மறந்துட்டு, வேற மனுஷியா மாறிடுவேன். சிரிப்புதான் என்
ஆயுதம்.
எந்த ஃபிரெண்ட் வீட்ல என்ன பார்ட்டின்னாலும், ‘உமாவைக் கூப்பிடுங்க’ன்னு எனக்கு முதல் அழைப்பு வரும். காரணம், என்னோட கலகலப்பு. நானும் சந்தோஷமா இருந்துக்கிட்டு, என்னைச் சுத்தியிருக்கிறவங்களையும் அப்படி மாத்திடுவேன். சிரிச்ச முகமும் சந்தோஷமான மனசும் கொடுக்கிற பொலிவை, எந்த பார்லர் ட்ரீட்மென்ட்டும், எப்பேர்பட்ட அழகு கிரீமும் கொடுக்காதுங்க...’’ - தனது முத்திரை சிரிப்புடன் முடிக்கிறார் உமா!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை த்ரிஷாவின் அழகு ரகசியம் என்ன?
» இரம் அலியின் அழகு ரகசியம் என்ன?
» நடிகை மானுவின் இளமை ரகசியம் என்ன?
» அது என்ன `சிதம்பர ரகசியம்'?
» அது என்ன `சிதம்பர ரகசியம்'?
» இரம் அலியின் அழகு ரகசியம் என்ன?
» நடிகை மானுவின் இளமை ரகசியம் என்ன?
» அது என்ன `சிதம்பர ரகசியம்'?
» அது என்ன `சிதம்பர ரகசியம்'?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum