தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரம் அலியின் அழகு ரகசியம் என்ன?

Go down

இரம் அலியின் அழகு ரகசியம் என்ன? Empty இரம் அலியின் அழகு ரகசியம் என்ன?

Post  ishwarya Fri Feb 22, 2013 2:22 pm

நாற்பது பிளஸ்சை தாண்டினால் போதும். ஒரே இரவில் நான்கைந்து வயது கூடியது போல திடீரென மாறிப்போகும் பெண்களின் உருவம். மெனோபாஸை நெருங்கும் அந்த வயதில் மெல்ல மெல்ல பருக்க ஆரம்பிக்கும் உடல். எட்டிப் பார்க்கிற முதல் நரையோ, சிரிக்கும் போது தெரிகிற முதல் சுருக்கமோ உண்டாக்கும் பதற்றத்தை, பருமன் ஏனோ எந்தப் பெண்ணுக்குள்ளும் ஏற்படுத்துவதில்லை. ஒரு சுற்று பருமன், இரண்டாகும்... மூன்றாகும்... பிறகு ‘நானே நானா... யாரோதானா...’ எனப் பாடுகிற அளவுக்கு உங்களையே உங்களுக்கு அடையாளம் தெரியாத அளவுக்குப் பெருத்துப் போவீர்கள். நடுத்தர வயதில் சேர்கிற பருமனை அத்தனை சுலபத்தில் விரட்ட முடியாது!

பிசியான காஸ்ட்யூம் டிசைனரும், நடிகர் அப்பாஸின் மனைவியுமான இரம் அலியை பார்க்கிற யாருக்கும் பொறாமை புகையும். அவரது ஸ்லிம் தோற்றமே காரணம். எத்தனை வருடங்கள், மாதங்கள் கழித்துப் பார்த்தாலும், ஒரே மாதிரி இருப்பார் இரம். ரகசியத்தை எங்களுக்கும் சொல்வீங்களா மேடம்? ‘‘முதல் விஷயம் என் குடும்ப வாகு. ஒல்லியா இருக்கறதுக்கான ஜீன் எனக்குள்ள வந்திருக்கணும். ஆனா என்னதான் ஜீன் இருந்தாலுமே, குழந்தை பிறந்ததும் எல்லா லேடீஸையும் போல நானும் எக்கச்சக்கமா வெயிட் போட்டேன். கல்யாணமான போது நான் 50 கிலோ. முதல் குழந்தை பிறந்ததும் 70 கிலோ ஆயிட்டேன். ரொம்பக் கஷ்டப்பட்டு, அதை 60 கிலோவா குறைச்சேன்.

அப்புறம் ரெண்டாவது குழந்தை பிறந்ததும் மறுபடி 20 கிலோ எகிறிடுச்சு. என்னையே எனக்குப் பிடிக்கலை. வீட்டை விட்டு வெளியே போகவே கூச்சப்
படுவேன். ரெண்டாவது குழந்தை பிறந்து ஒரு வருஷம் கழிச்சுதான் எடையைக் குறைக்கிறதுக்கான முயற்சிகளை ஆரம்பிச்சேன். நேஷனல் கிரிக்கெட் டீமோட ஃபிட்னஸ் ட்ரெயினர் ராம்ஜியோட அறிமுகம் கிடைச்சது. அவர் அட்வைஸ் படி ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சதுல கொஞ்சம் கொஞ்சமா என் வெயிட் குறைய ஆரம்பிச்சது. 55 கிலோவுக்கு வந்தேன். அதுக்கப்புறம் இன்னிக்கு வரைக்கும் நான் வெயிட்டே போடலை...’’ என்கிற இரம் அலி, ஜிம்மில் பழி கிடந்தோ, வீட்டுக்குள் மாங்குமாங்கென்று பயிற்சி செய்தோ, எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. பின்னே..?

‘‘வீட்டுக்குப் பக்கத்துல பீச்... என்னோட செல்ல நாய் கூட பீச் மணல்ல வாக்கிங் போவேன். சாஃப்டான பீச் மணல்ல அரை மணி நேரம் நடக்கறதுங்கிறது, சாதாரணமான சமதளத்துல ஒன்றரை மணி நேரம் நடக்கறதுக்கு சமம். பீச் மணல்ல நடக்க 3 மடங்கு எனர்ஜி அதிகம் தேவை.

சமீப காலமா யோகா பண்ண ஆரம்பிச்சிருக்கேன். பிராணாயாமம், சூர்ய நமஸ்காரம், தியானம் பண்றேன். ஜிம் போறதால கிடைக்கிற பலனை விட, இதுல அதிக பலன் இருக்கு. யோகா பண்ண ஆரம்பிச்ச முதல் நாலஞ்சு நாள்லயே வயிற்றுச்சதையும், கை, கால் சதைகளும் டைட் ஆகறதை உணரலாம். ஒரு மாசத்துல மொத்த தோற்றத்துலயுமே மாற்றத்தைப் பார்ப்பீங்க. உங்க ஸ்கின் இளமையா, பளபளப்பா, அழகா மாறும். எப்போதும் ஃபேஷியல் பண்ணின மாதிரி பளிச்னு இருக்கும்.

யோகா பண்றதுல இன்னொரு வசதி என்னன்னா, அதை நாம இருக்கிற எந்த இடத்துலயும் பண்ணலாம். எக்சர்சைஸ் மெஷின் மாதிரி எதையும் போற இடத்துக்கெல்லாம் தூக்கிட்டு அலைய வேண்டியதில்லை. சமீபத்துல ஹாலிடேஸுக்கு கனடால எங்கம்மா வீட்டுக்குப் போயிருந்தேன். நான் போன நேரம், உடம்பை உறைய வைக்கிற அளவுக்குக் குளிர். வீட்டைத் தாண்டி வெளியே வர முடியாத அந்த நிலையிலயும், நான் யோகா பண்ணினேன். அம்மா, அங்க உள்ள எங்க சொந்தக்காரங்கன்னு எல்லாரையும் யோகாவுக்குப் பழக்கிட்டு வந்துட்டேன். தினம் அரை மணி நேரம் யோகா பண்ணலைன்னா, எனக்கு மண்டையே வெடிச்சிடும்.

இதெல்லாம் பண்றதால சாப்பாட்டுல கன்ட்ரோல் வேணாம்னு அர்த்தமில்லை. எந்த எக்சர்சைஸ் பண்ணினாலும், கூடவே உணவுக்கட்டுப்பாடும் வேணும். நான் நல்லா சாப்பிடுவேன். ஆனா, மூணு வேளையும் வயிறு முட்ட சாப்பிட்டு, தூங்க மாட்டேன். ஸ்வீட்ஸோ, சாக்லெட்டோ சாப்பிட மாட்டேன். நொறுக்குத்தீனி பழக்கம் கிடையாது. பார்ட்டிக்கு போனா, குடிக்க மாட்டேன். சாப்பாடு கொஞ்சம் அதிகமானது தெரிஞ்சா, அதனால சேர்ந்த கலோரியை, எக்சர்சைஸ் பண்ணி சரிகட்டிடுவேன். என் வீடும் சரி, கடையும் சரி... ரெண்டுமே மாடி... லிஃப்ட் யூஸ் பண்ணாம, ஏறி, இறங்கறதே பெரிய எக்சர்சைஸ்தான்...’’ - மூச்சு வாங்காமல் பேசுகிறவர், பருமன் விஷயத்தில் அக்கறையுள்ளவர்களுக்கு ஒரு டிப்ஸ தருகிறார்.

இளமையாக
இருப்பதற்கு எளிய வழி என்ன தெரியுமா?
நிறைய தண்ணீர் குடியுங்கள்.
சைவ உணவையே சாப்பிடுங்கள்.
தினந்தோறும் தியானம் செய்யுங்கள். அதற்கு 10 நிமிடம் போதுமானது.
மன அழுத்தத்தைக் குறைப்பது உங்கள் இளமையான தோற்றத்துக்கு மிக அவசியம்!

‘‘உங்க டிரெஸ்தான் உங்களுக்கான அலாரம். வழக்கமான அளவு, திடீர்னு டைட் ஆனதா உணர்ந்தா, உடனே உஷாராயிடுங்க. எக்சர்சைஸ் பண்ணி, எக்ஸ்ட்ரா கிலோவை குறையுங்க. மறுபடி அதே டிரெஸ் உங்களுக்கு சரியா பொருந்தறதுதான் உங்களுக்கான ரிசல்ட்!’’

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum