இளமையான தோற்றத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்
Page 1 of 1

மனித உடல் என்பது மிக அற்புதமான கலை வடிவம். அதை மேலும் நேர்த்தியாக்க நடனக்கலை உதவும்.- ஜெஸ் சி. ஸ்காட் (எழுத்தாளர்)
அரங்குக்கு அரங்கு நளினம் கூடுகிறது ஊர்மிளா சத்யநாராயணாவின் நடனத்தில்.அதைவிட வேகமாக அதிகரிக்கிறது அவரது அழகும் இளமையும்!
ரகசியம் கேட்போமா? ‘‘டான்சர்னா இப்படித்தானே இருந்தாகணும்? டான்ஸ் பண்றதே எங்களுக்கு பெரிய எக்சர்சைஸ்தான். ஸோ... தனியா எக்சர்சைஸ் பண்ணணுங்கிற அவசியமே இல்லை. அது உடம்பை ஆரோக்கியமா வைக்கும். ஆனா, இளமையான தோற்றத்துக்கு அது மட்டுமே போதுமான்னு கேட்டா, நிச்சயமா போதாது. ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்களுக்கு கம்ப்யூட்டர் எவ்வளவு முக்கியமோ, அந்த மாதிரி என் துறைக்கு ஃபிட்னஸ் அவ்வளவு முக்கியம்...’’ - அக்கறையாக ஆரம்பிக்கிறார் ஊர்மிளா.
‘‘வாக்கிங் போறேன்... டிரெட்மில்ல ஒர்க் அவுட் பண்றேன்னு நிறைய பேர் சொல்வாங்க. நடக்கறது, ஓடறது, குதிக்கிறதுதான் எக்சர்சைஸ்னு நினைச்சிட்டிருக்கிறவங்கதான் அதிகம். ஆனா, 35 வயசுக்குப் பிறகு அந்த மாதிரிப் பயிற்சிகள் மட்டுமே பலன் தராது. தசைகளை பலப்படுத்தி, டைட் ஆக்கற வெயிட் பியரிங் பயிற்சிகளும் அவசியம். என் ஹஸ்பெண்டும் மகளும் கோல்ஃப் விளையாடுவாங்க. ஸ்விம் பண்ணுவாங்க. எனக்கு அதுக்கெல்லாம் நேரமிருக்காது. ஜிம்முக்கு போறது சரியா வரலை. அதனால வீட்லயே ஒரு ரூம்ல சின்னதா ஜிம் செட் பண்ணியாச்சு. என்னோட ஃபேவரைட் எக்சர்சைஸ்னா சைக்கிளிங்னு சொல்வேன். அதாவது ‘ஆன் தி ஸ்பாட்’ சைக்கிளிங். அது கால்களுக்கு நல்ல பயிற்சி.
டான்ஸ்ல ‘அரைமண்டி’ன்னு சொல்ற போஸ் ஒண்ணு இருக்கு. அதாவது கால்களை பாதியா மடக்கின மாதிரி உட்கார்ந்து ஆடறது. அதுக்கு சைக்கிளிங் ரொம்பவே ஹெல்ப் பண்ணுது. தவிர மெகா சைஸ் பால் வச்சு பண்ற ‘ஸ்விஸ் பால்’ பயிற்சிகளும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். முதுகு, கால்கள் மட்டுமில்லாம ஒட்டுமொத்த உடம்புக்கும் வளைஞ்சு கொடுக்கிற பக்குவத்தைக் கொடுக்கிற அற்புதமான பயிற்சி இது. இதெல்லாம் உடம்பை நேசிக்கவும், பத்திரமா பார்த்துக்கவும் பண்ற பயிற்சிகள்னா, மனசுக்காக பண்றது யோகா. ஒரே நேரத்துல மனசையும் உடம்பையும் இதமாக்கற அந்த மேஜிக், யோகாவுல மட்டும்தான் சாத்தியம். யோகா செய்து பழகறவங்களுக்கு, உடம்பு சொன்னபடியெல்லாம் வளையும்.
டிவி தீனி!
அமெரிக்க மனவியலாளர்கள் சமீபத்தில் ஒரு வேடிக்கையான சோதனை நிகழ்த்தினார்கள். சமையல் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை எந்த விதத்தில் பாதிக்கிறது என வெவ்வேறு விதமான நபர்களிடம் ஆராய்ந்தார்கள். மற்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களை விட, உணவு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை விரும்புபவர்கள் சாக்லெட், ஸ்வீட்ஸ், சிப்ஸ் போன்ற ஐங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டு, வெயிட் போடுகிற உண்மை நிரூபணமானது.
ஆகவே, சமையல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் அதில் காட்டப்படும் சத்துணவுகளை மட்டும் தாங்களே சமைத்துச் சாப்பிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதோடு, டிவி பார்க்கையில் ‘நோ மோர்’ நொறுக்குத்தீனி!
குறிப்பா என்னை மாதிரி டான்சர்ஸுக்கு அது ரொம்ப ரொம்ப முக்கியமாச்சே...’’ என்கிறவருக்கு திருமண வயதில் மகள் இருக்கிறார்! ‘‘ஆமாம்... என் மகளுக்கு 23 வயசாகுது. அவ என் வயித்துல இருந்தப்பவே, எத்தனை கிலோ வெயிட் போடலாம், என்னல்லாம் சாப்பிடலாம்னு டாக்டர் எனக்கு சார்ட் போட்டுக் கொடுத்துட்டாங்க. எல்லா பெண்களையும் போல, பிரசவத்துக்குப் பிறகு எனக்கும் கொஞ்சம் வெயிட் போட்டது. ஒருவேளை நான் வேற துறையில இருந்திருந்தா, அந்த அதிகப்படியான எடையை அலட்சியப்படுத்தியிருப்பேனோ, என்னவோ... டான்சராச்சே... நாளைக்கு இடுப்புல ஒட்டியாணத்தை மாட்டிக்கிட்டு டான்ஸ் பண்ணணுமே... வயிறு பெரிசா, வெளிய வந்தா அசிங்கமில்லையான்னு யோசிச்சேன். ஒரே வருஷத்துல பழைய உடல்வாகுக்குத் திரும்பிட்டேன். அன்னிலேருந்து, இன்னி வரைக்கும் ஒரு கிலோ கூடலை... குறையலை!
டயட் விஷயத்துலயும் ரொம்ப கண்டிப்பா இருப்பேன். காலை சாப்பாட்டுக்கு பாதாம், ட்ரை ஃப்ரூட்ஸ், பழங்கள் சேர்த்த முசிலி, கூடவே கொஞ்சம் பால். வாரத்துல ரெண்டு நாள்தான் இட்லி, தோசைக்கு அனுமதி. ஞாயிற்றுக்கிழமைகள்ல மட்டும், காலை உணவுக்கே நான்வெஜ் இருக்கும். ஆப்பம் எங்க வீட்டு சன்டே ஸ்பெஷல். மதியச் சாப்பாட்டுக்கு சப்பாத்தி இல்லைன்னா கொஞ்சம் தயிர் சாதம். விரத நாள் தவிர பெரும்பாலும் அசைவ உணவு இருக்கும். மீன், கிரில்டு சிக்கன்னு எதுலயும் துளிக்கூட எண்ணெயே இருக்காது. பழங்களும் பச்சைக் காய்கறிகளும் கட்டாய உணவு.
பிசியா இல்லாத நாள்கள்ல, கிச்சன்ல சின்னச் சின்ன வேலைகள் செய்யறது, நடந்து போய் ஷாப்பிங் பண்றதுன்னு ஏதோ ஒரு வேலையில என்னை ஈடுபடுத்திக்குவேன்.
மேற்கத்திய நாடுகள்ல பார்த்தீங்கன்னா, 60 பிளஸ்ல இருக்கிறவங்ககூட, அவ்ளோ அழகா, இளமையா, சுறுசுறுப்பா இருக்காங்க. அந்த வயசுலயும் எக்சர்சைஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. நம்மூர்ல குண்டா இருக்கிறவங்களுக்குத்தான் எக்சர்சைஸ்னு ஒரு தப்பான அபிப்ராயம் இருக்கு. ஆரோக்கியமா வாழ நினைக்கிற எல்லாருக்கும் ஏதோ ஒரு உடற்பயிற்சி அவசியம். எது உங்களுக்கு சரியானதுங்கிறதை தெரிஞ்சுக்கிட்டு பண்றது முக்கியம். இளமையும் அளவான உடல்வாகும் அமையறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, அந்த அனுபவத்துக்குப் பழகின யாரும், அதுக்காக மெனக்கெடத் தயங்க மாட்டாங்க. சந்தேகமா இருந்தா, அந்த அனுபவத்தை நீங்களும்தான் ட்ரை பண்ணிப் பாருங்களேன்!’’ அபிநய சுந்தரியின் பேச்சு, அழகாக இருந்து பார்க்கிற ஆவலைக் கிளப்புகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்றும் 16 - இளமையான தோற்றம் பெற எளிய டிப்ஸ்
» சொக்க வைக்கும் சோனியாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன?
» நெய்தான் முக்கியம்
» முயற்சி மிகவும் முக்கியம்
» தலைக்கவசத்தில் தரம் முக்கியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum