கோதுமை கஞ்சி
Page 1 of 1
கோதுமை கஞ்சி
என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 1 கப்,
வெல்லம் - 100 கிராம்,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெல்லத்தில் அளவாகத் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு, வடிகட்டவும். கோதுமை மாவில் தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அதில் கரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவை சிறிது சிறிதாக விட்டு, கட்டி தட்டாமல், கை விடாமல் கிளறவும். விரலை தண்ணீரில் நனைத்துவிட்டு, கலவையில் வைத்துப் பார்த்தால், ஒட்டாமல் வந்தால் அது சரியான பதம். அப்போது அதில் வெல்லக் கரைசலையும் உப்பையும் சேர்க்கவும். நன்கு கலந்து, மேலே நெய் விட்டுப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum