ஆடி மாத ஆல் இன் ஒன் கூழ்
Page 1 of 1
ஆடி மாத ஆல் இன் ஒன் கூழ்
ஜவ்வரிசி & 1 கப், கடைந்த மோர் & 1 கப், உப்பு
& தேவையான அளவு, கம்பு மாவு, கேழ்வரகு
மாவு & தலா 1 கப், சாம்பார் வெங்காயம் &
சிறிது, வெள்ளரிக்காய் & 1, நறுக்கிய பச்சை
மிளகாய் & 2, மோர் மிளகாய் & 4.
முதல் நாள் இரவே இரண்டு மாவையும் சிறிது
தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்து
வைக்கவும். மறுநாள் காலை அடுப்பில் அகலமான
பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு அதில்
அரை மணி நேரம் ஊற வைத்த ஜவ்வரிசியை வேக
விடவும்.
பாதி வெந்ததும், இரவு கரைத்து வைத்த கலவையை
ஜவ்வரிசியுடன் சேர்த்து, உப்பும் சேர்த்துக் கூழாகக் காய்ச்சவும்.வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும், இத்துடன் மோர், பச்சை மிளகாய்,
பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், நறுக்கிய வெள்ளரி சேர்த்து, முருங்கைக்கீரை பொரியலுடன், மாவிளக்கு போட்டு, அம்மனுக்குப் படைத்து, எல்லாருக்கும்பிரசாதமாகக் கொடுக்கலாம்.
மோர் மிளகாயுடனும் பரிமாறலாம்.வெறும் கேழ்வரகுக்குப் பதில் ஜவ்வரிசியும் சேர்த்ததால், வயிற்றுக்கும் இதமாக இருக்கும். சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum