கருப்பட்டிப் பணியாரம்
Page 1 of 1
கருப்பட்டிப் பணியாரம்
பச்சரிசி & 400 கிராம்
கருப்பட்டி & 200 கிராம்
வெல்லம் & 50 கிராம்
எண்ணெய் & பணியாரம் வேக வைப்பதற்குத் தேவையான அளவு.
அரிசியைக் கழுவி ஒரு மணிநேரம் ஊற வைத்து நீரை வடித்து வடிதட்டில் வைக்கவும். நீர் நன்றாக வடிந்ததும் (ஒருவேளை நீர் வடியாமல் இருந்தால் ஒரு பேப்பரில் பரப்பி வைத்தால் நீர் வற்றி விடும்)
அரிசியில் ஈரப்பதம் இருக்கும்போதே மிக்ஸியில் போட்டு திரித்து, முதல் இருமுறை திரித்த மாவை நைஸ் கண் ஜல்லடையிலும், பின் கடைசி முறை திரித்ததை பெருங்கண் ஜல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
கருப்பட்டியையும், வெல்லத்தையும் பொடித்து ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து (கருப்பட்டி+வெல்லம்) கரைத்து சிறிது சூடானதும் இறக்கி வடிகட்டவும். (இவ்வாறு செய்தால் இதில் உள்ள மண் பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும்.) பின்பு வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய இளம் பாகை ஊற்றி அடுப்பில் சலிக்க மாவை சேர்த்து சிறிது சூடாகும் வரை கிளறி இறக்கவும்.
பின்னர்¢ இதில் தேவையானமாவை எடுத்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கி அதில் பணியாரக் கரண்டி கொண்டு (சற்று ஏந்தலாக இருக்கும் கரண்டி) பணியாரமாக இந்த மாவை ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு பின்பு எடுக்கவும். (பணியாரம் ஊற்றியதும் மேலே உப்பி, சுற்றி வரை நெளியான கரை கூடி வந்தால் சரியான பக்குவத்துடன் இருக்கிறது என்று பொருள்.)
இப்பணியாரம் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
வெள்ளைப் பணியாரம் அல்லது வேறு எந்தப் பணியாரத்தை எண்ணெயில் ஊற்றினாலும் கரண்டி சற்று ஏந்தலாக இருந்தால் பணியாரம் நன்கு கரை கூடி வரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum