புட்டுப் பணியாரம்
Page 1 of 1
புட்டுப் பணியாரம்
பணியாரம் தமிழர்களின் தொன்ம பலகார வகைகளில் ஒன்று. சிறு தெய்வ வழிபாடுகளில் பணியாரம் சுட்டு வழிபடுவது முக்கிய சடங்கு.
நீத்தார்களுக்கான நினைவேந்தல்களிலும் இது பிரதான இடம் வகிக்கும். தமிழகத்தில்வாழும் பல இனங்களுக்கு பணியாரம் என்பது பாரம்பரியத்தின் குறியீடாக விளங்குகிறது.
செட்டிநாட்டில் எல்லா விழாக்கள்,பண்டிகைகளிலும் வெள்ளைப் பணியாரம் தவறாது இடம்பெறும். குழிப்பணியாரம் தென் மாவட்ட மக்களின் விருப்ப உணவு.
டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையில் கலந்தது பருப்பு பணியாரம். ஈழத்தில் பனங்காய் பணியாரம் முக்கிய சிற்றுண்டி.
பிழிந்தெடுத்த பனம்பழக் களியோடு அரிசிமாவு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுப்பார்கள். பெரும் பாலும் சந்தோஷ தருணங்களை பனங்காய் பணியாரத்தோடுதான் கொண்டாடுவார்கள் ஈழத்தமிழர்கள்.
வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் விரைவு உணவுகள், தமிழர்களின் பாரம்பரியமும் சத்தும் மிகுந்த பல கிராமிய உணவுகளை வழக்கொழியச் செய்து விட்டன. பணியாரமும் அந்த அலையில் அடித்து செல்லப்பட்ட பதார்த்தம்தான்.ஆனால், கிருஷ்ணகிரியில் புட்டுப்பணியாரம் தான் பிரதான உணவு. பரோட்டாக் கடைகளுக்கு இணையாக பணியாரக்கடைகள்.
காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை எந்தத் தெருவில் நடந்தாலும் 10 புட்டுப் பாட்டிகளை பார்க்கலாம்.ஆமாம்... புட்டுப்பணியாரம் விற்பவர்கள்தான் புட்டுப் எனற£ல்
பணியாரத்தின் தொடக்கத்தில் அதே அர்த்தம் தொனிக்கும் புட்டு என்பது முன்னெழுத்தாகி
விட்டது.இது இட்லி அளவுக்கு பெரிதானது.
பச்சரிசியே பிரதான சேர்மானம். சுவையிலும் தனித்துவமானது.பெரும்பாலான கிருஷ்ணகிரி வாசிகளுக்கு இந்த பணியாரம்தான் மதிய உணவு. சட்னி, சாம்பார் என சுவைகூட்ட சைட்&டிஷ்ஷும் உண்டு.5 பணியாரம் சாப்பிட்டால் பசி மிரண்
டோடி விடும்.
நான்கு பங்கு பச்சரிசி. ஒரு பங்கு புழுங்க
ல் அரிசி. புழுங்கல் அரிசியின் கால் பங்
குக்கு உளுந்து. கொஞ்சமாக வெந்தயம்.
அரிசி வகையறாக்களை 1 மணி நேரமும்,
உளுந்து, வெந்தயத்தை அரை மணி நேரமும்
ஊறவைக்க வேண்டும். முதல் நாள் இரவு
அரைத்து, எல்லாவற்றையும் ஒன்றாக்கி
கரைத்து வைத்தால் நல்லது. பணியாரத்தின்
உப்பல் தன்மைக்கு புளிப்பு அவசியம்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
கொத்துமல்லி, புதினா இவற்றை வதக்கி
வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப்
போட்டுக் கலந்து புட்டுக்கல்லில் ஊற்ற வேண்டும்.
பெரும்பாலும் பெரிய இட்லித்தட்டு கணக்கான 21
கண்μள்€ புட்டுக்கல்லையே எல்லோரும்
வைத்துள்ளார்கள்.
கிருஷ்ணகிரி பழைய அஞ்சல் நிலையம் முன்
புறத்தில் 19 வருடங்களாக புட்டுப்பணியாரம் விற்கும்
சந்திராவுக்கு நல்ல கைமணம். தக்காளி சட்னி,
பொட்டுக்கடலை சட்னி, சாம்பார் என மூவகை
சைட்&டிஷ் தருகிறார்.
நிராதரவான பாட்டிகள் பலருக்கும் இந்த பணியார விற்பனையே வாழ்க்கை தருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum