தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலை பாயசம்

Go down

கடலை பாயசம்               Empty கடலை பாயசம்

Post  ishwarya Thu Feb 21, 2013 4:54 pm

கடலைப்பருப்பு - கால்கிலோ
வெல்லம் - முக்கால் கிலோ
தேங்காய் - 2
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 25 கிராம்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
கடலைப்பருப்பைக் கழுவிக் கொள்ளுங்கள். வாணலியில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் கடலைப்பருப்பைப் போட்டு வேக வையுங்கள். பருப்பு மலர்ந்து வந்ததும், எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவி முதல் பால் கால் லிட்டரும், இரண்டாம் பால் முக்கால் லிட்டரும் எடுத்துக் கொள்ளுங்கள்.

வெல்லத்தில் போதிய அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சுங்கள். வெல்லம் கரைத்து பாகாகியதும், அடித்தங்கியவற்றை கரண்டியால் அரித்து எடுத்துவிட்டு அரைத்த பருப்பைக் கொட்டி, இரண்டாம் பாலை ஊற்றி கிளறுங்கள்.

பால் வற்றி வரும் நேரத்தில் முதல் பாலை ஊற்றி ஒருகொதி வந்ததும், முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி போட்டு இறக்கி விடுங்கள். கடலைப் பாயசம் ரெடி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum