கடலை மாவு பாயசம்
Page 1 of 1
கடலை மாவு பாயசம்
என்னென்ன தேவை?
கடலை மாவு - அரை கப்,
சர்க்கரை - தேவைக்கேற்ப,
பொடித்த முந்திரி - 6 அல்லது சாரப்பருப்பு - சிறிது,
பால் - 1 லிட்டர்,
நெய் - கால் கப்,
ஏலக்காய் தூள் - சிறிது,
குங்குமப்பூ சிறிது.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, கடலை மாவை வாசனை வரும்வரை வறுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி ஆற வைக்கவும். பாதி பாலில், வறுத்த மாவைச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். மீதி பாலை அடுப்பில் வைத்து, கரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து, கை விடாமல் கிளறவும். ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்துக் கலந்து, பாயசம் பதத்துக்கு வந்ததும் இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி அல்லது சாரப்பருப்பு சேர்த்து, குங்குமப்பூ சேர்த்து சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum