தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொண்டைக் கடலை மசாலா

Go down

கொண்டைக் கடலை மசாலா       Empty கொண்டைக் கடலை மசாலா

Post  ishwarya Tue Feb 26, 2013 12:25 pm

பெரிய வெள்ளை கொண்டைக் கடலை & 1 கப், வெங்காயம் & 3, தக்காளி & 2, இஞ்சி & சிறிய துண்டு, எலுமிச்சை சாறு & 1 டீஸ்பூன், விரும்பினால் பூண்டு & 8 பல், நெய்யும் எண்ணெயும் கலந்து & 3 அல்லது 4 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவையான அளவு, சர்க்கரை & அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை & 1 டேபிள் ஸ்பூன், உருளைக் கிழங்கு & 2.
மேலே அலங்கரிக்க: பொடியாக அல்லது வட்டமாக அரிந்த வெங்காயம், கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரி பருப்பு & 10.
கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு நன்கு கழுவி, வேறு தண்ணீரில் சேர்த்து இத்துடன் உருளைக் கிழங்கையும் கழுவி, தோல் நீக்கி சேர்க்கவும். 20 நிமிடம் குக்கரில் வேக வைக்கவும்.

பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். கடைசியாக தக்காளியையும் சேர்த்து அரைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் அரைத்த மசாலா விழுது மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் விடாமல் கிளறவும். இத்துடன் உப்பு, வேகவைத்த கடலை, உருளைக் கிழங்கு (மசித்தது) தண்ணீரோடு சேர்த்து மசாலா கெட்டியாகும்வரை கொதிக்கவிடவும்.

அடுப்பிலிருந்து இறக்கி, கொத்தமல்லித்தழை, நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை பழச்சாறு, முந்திரி சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: கொண்டைக் கடலையை சிறிது குழைய வேக வைக்கவும். இந்த கலவையை கிண்ணத்தில் நிரப்பி டீஸ்பூன் போட்டு கொலுவிற்கு வரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சாப்பிட கொடுக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum