திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயில்
Page 1 of 1
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயில்
திருப்பூரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் குலோத்துங்கன் செங்கண்ணன் என்பவனால் கட்டப்பட்ட விஸ்வஸ்வரர் ஆலயம் உள்ளது.
சுவாமி: விஸ்வேஸ்வரர் சுவாமி,
அம்பாள்: விசாலாட்சி
கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. அழகான ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. பெரிய நந்தி பலிபீடம், துவஸ்தம்பம் உள்ளன. அழகான விமானங்களும் உள்ளன. உள்ளே நுழைவும் முன் வழிவிடும் கணபதி உள்ளார். கருவறையிலுள்ள சிவலிங்கம், காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒன்று.
இவரைத் தரிசித்தால் காசியிலுள்ள சிவனைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். அர்த்த மண்டபத்தில் கணபதி, நந்திதேவர், சூரியன், சந்திரன், நால்வர் சிலைகளும், கஜலட்சுமி மற்றும் ராஜராஜேஸ்வரி சன்னதிகளும் உள்ளன. கோஷ்டங்களில் பிரம்மா, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர் உள்ளனர்.
பிரகாரத்தைச் சுற்றி வருகையில் சனீஸ்வரன் சன்னதி உள்ளது. இவரை வணங்க - சனிதோஷம் நீங்குவது கண்கூடு. பின் நவக்கிரகங்கள், ஈசான மூலையில் கிணறு, பைரவர் சன்னதிகள் வருகின்றன. தண்டாயுதபாணி சன்னதியும் உள்ளது. இக்கோவில் தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன.
பிரகார வெளியில் அங்காளம்மன், நாகர், சப்த கன்னியர் உள்ளனர். சிவ சன்னதி மேலே 12 ராசிகள் விதானத்திலுள்ளன. இக் கோவிலில் கல் சங்கிலி பிரபலம். இங்கு பைரவர் வழிபாடு விசேஷம். கடன் உள்ளவர்கள் பைரவரின் வலது, இடது காதுகளில் புனுகை சார்த்தி வழிபட குறைகள் நீங்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயில்
» கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்
» திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்குள்
» திருப்பூர் மாவட்டத்தில் இன்று
» திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum