சூர்மா லட்டு
Page 1 of 1
சூர்மா லட்டு
என்னென்ன தேவை?
சம்பா ரவை - 1 கப்,
வெல்லம் அல்லது சர்க்கரை - 1 கப்,
நெய் - அரை கப்,
உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10,
திராட்சை - 10,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
சம்பா ரவையை சுத்தம் செய்து, மிக்சியில் பொடித்து, சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். சிறிது தண்ணீரில் அதை முக்கால் வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும். உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சையையும் வறுத்து வைக்கவும். வெல்லம் அல்லது சர்க்கரையை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும்.
ஒரு கம்பிப்பாகு பதம் வந்ததும், வேக வைத்த சம்பா ரவை, உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து, மிதமான தீயில் கிளறவும். கலவை நன்கு சேர்ந்து, சுருண்டு வரும் போது, வறுத்ததைச் சேர்க்கவும். பிறகு இறக்கி, சிறிது ஆறியதும், இன்னும் சிறிது நெய் விட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum