பச்சை மொச்சை, கொத்தமல்லி சித்ரான்னம்
Page 1 of 1
பச்சை மொச்சை, கொத்தமல்லி சித்ரான்னம்
பச்சரிசி - 1 கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - அரை கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி சாறு - அரை கப்,
லவங்கம், பட்டை, தனியா,
சோம்பு தலா கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3 அல்லது 4, சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சை மொச்சை - அரை கப்,
எலுமிச்சை சாறு - ஒன்றரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் -சிறிது,
எண்ணெய் மற்றும் நெய் - சிறிது.
அரிசியைக் களைந்து, ஊற வைக்கவும். தக்காளியை வேக வைத்து, அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். லவங்கம், பட்டை, தனியா, சோம்பு ஆகியவற்றை வறுத்து, தூள் செய்யவும். இத்துடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு வறுத்தரைத்த மசாலா பொருள்களைச் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி, மொச்சை, தக்காளி சாறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, அரிசியையும் நெய்யையும் சேர்த்து, ஒரு விசில்வரை வேக வைத்து இறக்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : உளுத்தம் பருப்பு சித்ரான்னம்
» பச்சை மொச்சை சாம்பார்
» கிராமத்து பச்சை மொச்சை குழம்பு
» சுவையான... மொச்சை வறுவல்!!!
» மசாலா மொச்சை சுண்டல்
» பச்சை மொச்சை சாம்பார்
» கிராமத்து பச்சை மொச்சை குழம்பு
» சுவையான... மொச்சை வறுவல்!!!
» மசாலா மொச்சை சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum