சுவையான... மொச்சை வறுவல்!!!
Page 1 of 1
சுவையான... மொச்சை வறுவல்!!!
மொச்சை என்றால் பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு இருக்கும் மொச்சை உடலுக்கு மிகவும் சிறந்ததும் கூட. மேலும் இந்த மொச்சையை வைத்து குழம்பு தான் அதிகம் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் அந்த மொச்சையை நாம் வறுவல் போன்று, ஒரு அசைவ உணவு டேஸ்டில் ஈஸியாக செய்து சாப்பிடலாம். இப்போது அந்த மொச்சை வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மொச்சை - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
வரமிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
தேங்காய் - 1/4 மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மொச்சையை கழுவி குக்கரில் போட்டு, வேக வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியை எடுத்துக் கொண்டு அதில், நறுக்கிய வெங்காயம், தக்காளி, வரமிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, மல்லி, மஞ்சள் தூள், துருவிய தேங்காய் ஆகிய அனைத்தையும் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சற்று தாராளமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை அதோடு சேர்த்து, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வேக வைத்துள்ள மொச்சையை சேர்த்து, ஒரு 5 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
இப்போது சுவையான மொச்சை வறுவல் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவிப் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவையான வாழைக்காய் வறுவல்
» சுவையான இறால் மீன் வறுவல்
» சுவையான இறால் மீன் வறுவல்
» மசாலா மொச்சை சுண்டல்
» ரோஸ்டட் மசாலா மொச்சை
» சுவையான இறால் மீன் வறுவல்
» சுவையான இறால் மீன் வறுவல்
» மசாலா மொச்சை சுண்டல்
» ரோஸ்டட் மசாலா மொச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum