பிரம்மோற்சவம்
Page 1 of 1
பிரம்மோற்சவம்
திருப்பதியில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்கு முதன் முதலில் பிரம்மாதான் உற்சவம் கொண்டாடினார் என்பதால் திருமலையில் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் எடுக்கப்படும் இந்த பிரம்மோற்சவத்தின் தொடக்க நாளன்று கொடி மரத்தில் கருட பகவானின் திருவுருவத்துடன் கூடிய கொடி ஏற்றப்படும்.
பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளன்று உற்சவம் முடிந்தது என்பதை அகிலத்துக்கு அறிவிக்கும் விதமாகக் கொடியிறக்கப்படும். ஒன்பது நாட்கள் கொண் டாடப்படும் இந்த பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் மலையப்பர் காலையும் மாலையும் வெவ்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் உலா வருவார்.
பிரம்மாவே முன்நின்று நடத்துகிறார் என்பதால் மலையப்பர் வாகனத்துக்கு முன்னால் ஒரு சிறு தேர் வலம் வரும். அதில் பிரம்ம தேவன் ஆரோகணித்திருப்பதாக ஐதீகம். பிரம்மோற்சவத்தின் போது மலையப்பர் எழுந்தருளும் வாகனங்கள் பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், சிம்ம வாகனம், முத்துப் பல்லக்கு, கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், மோகினி அவதாரக் கோலம், அனுமந்த வாகனம், யானை வாகனம், சூர்ய பிரபை, சந்திர பிரபை, அஸ்வ வாகனம், கருட வாகனம், ஹம்ஸ வாகனம், தேர் ஆகியவை.
ஐந்தாம் நாள் கருட சேவை, எட்டாம் நாள் தேர்த் திருவிழா, இரண்டும் கூடுதல் சிறப்பு வாய்ந்தவை. உலகம் முழுவதிலும் இருந்து லட்சக் கணக் கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு வெங்கடாசலபதியின் அருளைப் பெற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சனிபகவான் கோயில் பிரம்மோற்சவம்
» பெருமாளின் பிரம்மோற்சவம் கண்டீரா..!
» திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு
» திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு
» சனிபகவான் கோயில் பிரம்மோற்சவம்
» பெருமாளின் பிரம்மோற்சவம் கண்டீரா..!
» திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு
» திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு
» சனிபகவான் கோயில் பிரம்மோற்சவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum