ரவைக் கிச்சடி
Page 1 of 1
ரவைக் கிச்சடி
பம்பாய் ரவை – 1 1/2கப்
வெங்காயம் – 2
உருளைக் கிழங்கு – 1
முட்டைக்கோஸ் – 5,6 இலைகள்
கேரட் – 1
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)
குடமிளகாய் – 1
பீன்ஸ் – 10
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 8
இஞ்சி – சிறிது
எண்ணை – 1/4 கப்
பனீர் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 5 கப்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித் தழை – சிறிது
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.
வாணலி அல்லது பிரஷர் பேனில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து அதிகத் தீயில் வேகமாக அடிப்பிடிக்காமல் இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது உதிர்த்த பனீர், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூளுடன் கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைச் சேர்த்து அடுப்பில் நிதானமான சூட்டில் கிளறி, மூடிவைக்கவும்.
நன்றாக வெந்ததும் இறக்கி, நெய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.
* அதிகத் தீயில், காய்கறிகளை, குறைந்த நிமிடத்தில் வேகமாக அரைவேக்காடு அளவிலேயே வதக்கி நிறுத்துவது சைனீஸ் முறை. கொஞ்சம் ஆரோக்யமானதும் கூட.
* எலுமிச்சை சாறுக்குப் பதிலாக புளித் தண்ணீர் அல்லது க்ரீம் உள்ள கெட்டித் தயிர் உபயோகிக்கலாம்.
* தண்ணீருக்குப் பதில் முழுக்கவே தக்காளிச் சாறு உபயோகித்தும் செய்யலாம். இதற்கு புளி, எலுமிச்சைச் சாறு, தயிர் எதுவும் சேர்க்கக் கூடாது.
Tips:
கிச்சடிக்கு, ரவையை வறுக்கத் தேவையில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum