தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மட்டன் கிச்சடி

Go down

மட்டன் கிச்சடி                 Empty மட்டன் கிச்சடி

Post  ishwarya Mon Feb 25, 2013 2:36 pm

* அரிசி - 2 டம்ளர் (400 கிராம்),
* பாசிப்பருப்பு - 1 டம்ளர் (200 கிராம்),
* மட்டன் - 250 கிராம்,
* பெரிய வெங்காயம் - 1,
* தக்காளி - 1 (நடுத்தரம்),
* பச்சைப்பட்டாணி - 1 கைப்பிடி,
* பட்டை - சிறிது,
* கிராம்பு - 2,
* ஏலக்காய் - 1,
* பிரிஞ்சி இலை(பிரியாணி இலை) - 1,
* மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
* கறிவேப்பிலை - சிறிது,
* நெய் - 1 மேசைக்கரண்டி,
* எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
* உப்பு - தேவையான அளவு.
* அரியையும், பாசிப்பருப்பையும் ஒன்றாக கழுவி வைக்கவும்.
* மட்டனை சின்ன துண்டுகளாக்கி, கழுவி வைக்கவும்.
* வெங்காயத்தை சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.
* தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும், பட்டாணி, மட்டன் சேர்த்து வதக்கவும்.
* எல்லாம் வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
* வதங்கிய பின், ஐந்தரை டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதித்ததும் கழுவிய அரிசி, பருப்பு, உப்பு சேர்த்து கலக்கி மூடவும்.
* வெயிட் போட்டு ஒரு விசில் வந்தவுடன் இறக்கி, மெதுவாக கேஸை வெளியேற்றி திறந்து, நெய் விட்டு கலக்கி நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* சூடாக கத்தரிக்காய் கிரேவியுடன் நன்றாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum