தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்ஸ் கிச்சடி

Go down

ஓட்ஸ் கிச்சடி                                     Empty ஓட்ஸ் கிச்சடி

Post  ishwarya Thu Mar 14, 2013 5:11 pm

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்-2 கப்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
பீன்ஸ்_5
சின்ன வெங்காயம்_ 10
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கிராம்பு_2
பிரிஞ்சி இலை_2
கறிவேப்பிலை

செய்முறை:

* பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

* வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி,கேரட்,பீன்ஸ் இவற்றை சிறுசிறு நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

* வெறும் வாணலியில் ஓட்ஸைக் கொட்டி சூடு வர வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் ஒன்றும் பாதியுமாக உடைந்துவிடும். அல்லது அப்படியேகூட பயன்படுத்தலாம்.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு, தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

* அடுத்து கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு பங்கு என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

* கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டுக் கட்டி தட்டாமல் கிளறவும். ஓட்ஸ் வெந்து வரும் வரை மிதமானத் தீயில் மூடி வேக வைக்கவும்.

* நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum