வெஜிடபிள் ஊத்தப்பம்
Page 1 of 1
வெஜிடபிள் ஊத்தப்பம்
4 பேருக்கு
மீதமுள்ள இட்லி அல்லது தோசை மாவு : கொஞ்சம்
கேரட் : 1
பச்சைப் பட்டாணி உரித்தது : ஒரு சிறு கப்
காலிஃப்ளவர் : உதிர்த்தது ஒரு கப்
உப்பு : இரண்டு சிட்டிகை
மிளகு சீரகத்தூள் : 2 டீஸ்பூன்
எண்ணெய் : தே.அளவு
கேரட்டை மேல் தோல் சீவி வட்டவட்டமாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக உதிர்த்துக் கொள்ளவும்.அடுப்பில் சற்று பெரிய கிண்ணத்தில் தண்ணீர் காய வைத்து உப்புப் போட்டு, கொதிக்கும் போது முதலில் கேரட் துண்டுகள், இரண்டு நிமிடம் கழித்து பட்டாணி, இரண்டு நிமிடம் கழித்து காலிஃப்ளவர் என்று வரிசையாகப் போடவும். எல்லாம் சேர்ந்து ஒரு நிமிடம் கொதித்து வெந்தவுடன் எடுத்து வடிதட்டில் கொட்டவும்.
சூடு ஆறியவுடன் மூன்று காய்களையும் தனித்தனியே பிரித்து வேறு வேறு கிண்ணங்களில் வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் காய வைத்து மாவைக் கரைத்து சிறுசிறு ஊத்தப்பமாக ஊற்ற வேண்டும்.
மேல் பாகம் வேகும் முன் நடுவில் கேரட் துண்டு ஒன்று, பட்டாணி மூன்று சிறிது காலிஃப்ளவர் துண்டுகள் வைக்கவும். சுற்றிலும் எண்ணெய்விட்டு திருப்பிப் போடவும். லேசாக எண்ணெய்விட்டு வெந்தவுடன் எடுக்கவும். விரும்பினால் காய்களின்மேல் மிளகு சீரகத்தூள் தூவி திருப்பிப் போடவும்.
இதை இட்லிப் பொடி, சட்னி, சாம்பார் எதனுடனும் உண்ணலாம். பஃபே விருந்தில் பரிமாற ஏற்ற உணவில் இதுவும் ஒன்றாகும்.
டிப்ஸ்
காய்கறிகளுக்கு சுவை கூட்டுவது அதை வேக வைக்கும் முறைதான். தோல் சீவிய காய்கறியாக இருந்தால் அவற்றைக் கொதிக்கும் நீரில் வேக வைக்கவேண்டும். தோல் சீவாத காய்கறிகளைப் பச்சைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். இதனால் அதன் சுவை சிறிதும் கெடாது.
பால் காய்ச்சும்போது ஒரு கண்ணாடி கோலியைப் பாலிப் போட்டு வைத்தால் பால் பொங்கி வழியாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜவ்வரிசி ஊத்தப்பம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» பட்டாணி ஊத்தப்பம்
» சமையல்:பனீர் ஊத்தப்பம்
» ஓட்ஸ் கோதுமை ஊத்தப்பம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» பட்டாணி ஊத்தப்பம்
» சமையல்:பனீர் ஊத்தப்பம்
» ஓட்ஸ் கோதுமை ஊத்தப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum