ஜவ்வரிசி ஊத்தப்பம்
Page 1 of 1
ஜவ்வரிசி ஊத்தப்பம்
ஜவ்வரிசி ஊத்தப்பம் காலையில் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு டிபன். இது மிகவும் சுவையாகவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும். இந்த ஜவ்வரிசி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - 1 கப்
அரிசி - 1 கப்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிது
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க :
பச்சை மிளகாய் - 4-6
இஞ்சி - 1/2 இஞ்ச்
தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஜவ்வரிசி மற்றும் அரிசியை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பின் அரிசி மற்றும் ஜவ்வரிசியை நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கிரைண்டரில் அரிசியைப் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஜவ்வரிசியைக் போட்டு நன்கு நைஸாக அரைக்கவும். அதனை மறக்காமல் தோசை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த மாவில் தயிர், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு மற்றும் அரைத்த மிளகாய் கலவையை சேர்த்து கலக்கவும். வேண்டுமென்றால் தண்ணீரை ஊற்றியும் கலக்கிக் கொள்ளலாம்.
பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும், அந்த மாவை கல்லில் தடிமனாக ஊத்தாப்பம் போல் விட்டு எண்ணெய் விட்டு, பின் திருப்பிப் போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான ஜவ்வரிசி ஊத்தப்பம் ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடபிள் ஊத்தப்பம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» பட்டாணி ஊத்தப்பம்
» ஓட்ஸ் கோதுமை ஊத்தப்பம்
» சமையல்:பனீர் ஊத்தப்பம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» பட்டாணி ஊத்தப்பம்
» ஓட்ஸ் கோதுமை ஊத்தப்பம்
» சமையல்:பனீர் ஊத்தப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum