காளான் ஸ்டியூ
Page 1 of 1
காளான் ஸ்டியூ
என்னென்ன தேவை?
காளான் - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 4,
தேங்காய் - அரை மூடி,
கெட்டியான முதல் தேங்காய்ப் பால் - அரை கப்,
இரண்டாவது பால் - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்,
சமையல் எண்ணெய் - அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் சமையல் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சுத்தம் செய்த காளான் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். காளான் வதங்கியதும், இரண்டாவது தேங்காய்ப் பால் விட்டு வேக விடவும். வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, கெட்டியான முதல் தேங்காய்ப் பால் விடவும்.
நன்கு கலந்து விட்டு, நடுவில் சற்று குழித்து, கறிவேப்பிலையைக் கைகளால் கசக்கிப் போட்டு, அதன் மேல் பச்சை தேங்காய் எண்ணெயை விட்டு, மூடி வைக்கவும். அந்த சூட்டிலேயே இரண்டின் மணமும் ஸ்டியூவினுள் இறங்கும். சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம் என எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். இதே முறையில் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மற்ற காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum