காளான் சூப்
Page 1 of 1
காளான் சூப்
நறுக்கிய காளான் & 200 கிராம் பெரிய வெங்காயம் & 1 வெண்ணெய் & 1.5 மேஜைக் கரண்டி சிறிய துண்டு இஞ்சி & 1 பச்சை மிளகாய் & 1 கோதுமை மாவு & 1 மேஜைக் கரண்டி பால் & 1.5 கப் உப்பு & தேவையான அளவு சர்க்கரை & 2 தேக்கரண்டி
பிரஷர் பானில் வெண்ணெயைச் சூடாக்கிக் கொண்டு, குறைந்த தீயில் 3 நிமிடங்கள் நறுக்கிய வெங்காயத்தை வதக்கிக் கொண்டு, பிறகு நன்கு கழுவிய காளான் துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் தொடர்ந்து கிளறி விடவும். கோதுமை மாவைத் தூவி, மேலும் ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். 1 கப் பால், அரை கப் தண்ணீர் இரண்டையும் அதில் ஊற்றவும். இஞ்சியையும் முழு பச்சை மிளகாயையும் அதில் சேர்த்துக் கொள்ளவும். மூடியால் மூடி வெயிட் வைத்து குறைந்த தீயில் ஒரு விசில் சத்தம் வரும் வரை வேக வைக்கவும். ஆறிய பிறகு இஞ்சியையும், மிளகாய் துண்டையும் எடுத்துவிட வேண்டும். மிக்ஸியில் விழுது போல் அரைத்து, நைலான் சூப் வடிகட்டியின் மூலம் வடித்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப மீதியிருக்கும் பால், சர்க்கரை சேர்த்துக் கொதிநிலை வரும் வரை குறைந்த தீயில் மீண்டும் சூடாக்கவும். சீரான சூட்டிற்காக இடையே ஓரிரு முறை கலக்க வேண்டும். பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள் தூவலாம். சூப் கிண்ணங்களில் ஊற்றி மேலே துருவிய சீஸ் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum