இளைப்பிற்கான இளகல்
Page 1 of 1
இளைப்பிற்கான இளகல்
அறிகுறிகள்:
இளைப்பு.
தேவையான பொருள்கள்:
மிளகு = 200 கிராம்
சீரகம் = 25 கிராம்
வெந்தயம் = 25 கிராம்
கடுகு = 25 கிராம்
பெருங்காயம் = 25 கிராம்
பெருஞ்சீரகம் = 25 கிராம்
ஏலக்காய் = 25 கிராம்
ஜாதிக்காய் = 50 கிராம்
தேன் = 500 கிராம்
நெய் = சிறிது
பால் = சிறிது
செய்முறை:
மிளகை நன்றாக இடித்து கொள்ளவும்.
சீரகத்தை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி பிறகு வறுத்து இடித்து கொள்ளவும்.
வெந்தயத்தை கழுவி நிழலில் உலர்த்தி சிறிது நெய் விட்டு வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.
கடுகை நீர் விட்டு பிசைந்து கழுவி நிழலில் உலர்த்தி சிறிது நெய் விட்டு வறுத்து கொள்ளவும்.
பெருங்காயத்தை நன்கு உடைத்து மண் பாத்திரத்தில் போட்டு 100 மி.லி பாலை விட்டு 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
ஏலக்காயை நெய்யில் வறுத்து இடித்து கொள்ளவும்.
ஜாதிக்காயை சிறு துண்டுகளாக உடைத்து மண் பாத்திரத்தில் போட்டு சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.
எல்லாவற்றையும் மீண்டும் நன்றாக இடித்து சலித்து ஒரு மண் பானையில் போட்டு தேனை ஊற்றி மரக்கரண்டியால் கிளறி விட்டு பானையை மண் மூடியால் மூடி 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி 3 நாட்கள் கழித்து பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
காலை உணவுக்கு 1 மணி நேரம் முன் 1 தேக்கரண்டி அளவு மருந்து சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வரவும். 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இளைப்பு குறையும்.
குறிப்பு:
குளிர்ந்த பானங்கள், பழஞ்சோறு, புலால் உணவு, இளநீர் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum