உடல் நலம் பெற இளகல்
Page 1 of 1
உடல் நலம் பெற இளகல்
தேவையான பொருட்கள்:
புளியங்கொட்டைப் பருப்பு – 150 கிராம்
கசகசா – 150 கிராம்
பாதாம் பிசின் – 150 கிராம்
விளாம்பிசின் – 150 கிராம்
பேரீச்சம் பழம் – 150 கிராம்
நிலப்பனைக் கிழங்கு – 150 கிராம்
சம்பா கோதுமை – 150 கிராம்
சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
ஏல அரிசி – 25 கிராம்
இலவங்கப்பட்டை – 25 கிராம்
பனைவெல்லம் – 1 கிலோ
தேன் – 500 கிராம்
பசுநெய் – 500 கிராம்
பசும் பால்.
செய்முறை:
புளியங்கொட்டையை எடைக்கு இரட்டிப்பாக எடுத்து வெந்நீரில் ஊறவைத்து தோலைப் போக்கி நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக உடைத்து இளம் வறுவலாக இடித்து வடிகட்டி வைக்கவேண்டும். கசகசாவை இடித்துக் கொள்ளவேண்டும். பாதாம் பிசின், விளாம்பிசின், இரண்டையும் ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் பசும் பாலில் 12 மணி நேரம் ஊற வைக்கவும். நிலப்பனைக் கிழங்கை தட்டி மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் பசும்பாலை ஊற்றி 3 மணி நேரம் மூடி வைத்திருந்து எடுத்து உலர்த்தி இடிக்கவும். சம்பா கோதுமையை அரைத்து மாவாக்கி எடையளவு வடிகட்டவும். சுக்கு, மிளகு, ஏல அரிசி, லவங்கம், பட்டை இவைகளை மீண்டும் இடித்து இளம் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். மீண்டும் இடித்து புளியங்கொட்டை தூளையும், கசகசா, நிலப்பனைத் தூள், சம்பா கோதுமை, சுக்கு, மிளகு, இலவங்கம், பட்டை சேர்த்து இடித்தத் தூளை ஒன்றாகப் போட்டு நன்கு இடித்து வடிகட்டவும்.
பனைவெல்லத்தை இடித்து இரும்புக் கடாயில் போட்டு 10 நிமிடங்கள் கிண்டி, தேனை ஊற்றி 10 நிமிடங்கள் கிண்டி இறக்கி நெய்யை ஊற்றிக் கிண்டவும். பீங்கான் பாத்திரத்தில் மருந்தைப் போட்டு துணியால் மூடி 3 மணி நேரம் வெயிலில் வைத்துப் பத்திரப் படுத்தவும்.
மருந்துண்ணும் முறை:
மருந்துண்ணுப் போகும் நாளைக்கு முன் சுகபேதி அருந்தி, அடுத்த நாள் மருந்துண்ண ஆரம்பிக்கவும்.
காலை உணவுக்கு ஒரு மணி முன் 15 கிராம் இளகலுடன் சிறிது பசும்பால் அல்லது வெந்நீர் அருந்தவும். இரவு உணவு உண்ட 30 நிமிடங்கள் கழித்து 15 கிராம் இளகலுடன் சிறிது பால் அருந்தவும். இந்த மருந்தை 80 நாட்கள் உண்ண வேண்டும்.
தீரும் நோய்கள்:
வயிற்று தொடர்பான நோய்கள் குறையும். உடல் நல்ல பலம் பெறும். முகம் அழகாக மாறும்.
மருந்துண்ணும் நாட்களில் தள்ள வேண்டியவை:
மதுவகைகள், பழஞ்சோறு, கருவாட்டுக் குழம்பு, குளிர்ந்த பானங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக உணவுடன் சோ்த்துக் கொள்ள கூடாது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» குறைவான ஹீமோகுளோபின் உடல் நலம் பாதிக்கும்
» உடல் நலம் பெற சூரணம்
» உடல் நலம் காக்கும் தாய்ப்பால்
» உடல் நலம் காக்கும் கல்யாண முருங்கை
» உடல் நலம் காக்கும் மூலிகைகள்
» உடல் நலம் பெற சூரணம்
» உடல் நலம் காக்கும் தாய்ப்பால்
» உடல் நலம் காக்கும் கல்யாண முருங்கை
» உடல் நலம் காக்கும் மூலிகைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum