தாமரைப் பூ இளகல்
Page 1 of 1
தாமரைப் பூ இளகல்
தேவையான பொருட்கள்
வெள்ளைத் தாமரைப் பூ – 150 கிராம்
சிவப்பு தமாரைப் பூ – 150 கிராம்
காய்ந்த திராட்சை – 150 கிராம்
சீந்தில் கொடி – 150 கிராம்
சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
கொடிச் சம்பங்கி பூ – 25 கிராம்
ஏல அரிசி – 25 கிராம்
சாதிப்பத்திரி – 25 கிராம்
வெல்லம் - 850 கிராம்
தேன் – 850 கிராம்
நெய் – 850 கிராம்
குங்குமப்பூ – 5 கிராம்
பால்
செய்முறை:
வெள்ளைத் தாமரை, சிகப்பு தாமரைப் பூ ஆகியவைகளை நிழலில் உலர்த்தி எடையளவு எடுத்துக் கொள்ளவேண்டும். சீந்தில் கொடியை நிழலில் உலர்த்தி பசும் பாலில் ஊற வைத்து மீண்டும் நிழலில் உலர்த்திக் கொள்ளவேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தட்டி வறுத்து இடித்துக் கொள்ளவேண்டும். அதிமதுரத்தை பசும்பாலில் ஊற வைத்து இடித்துக் கொள்ளவேண்டும். கொடிச் சம்பங்கி பூவை பசும்பாலில் கழுவி உலர்த்தவேண்டும். ஏல அரிசி, சாதிப்பத்திரி இரண்டையும் இளம்வறுவலாக வறுத்து இடித்துக் கொள்ளவேண்டும். எல்லாச் சரக்குகளையும் கல் உரலில் இடித்து வடிகட்டிவேண்டும். வெல்லத்தைக் கடாயில் போட்டு 250 மி. லிட்டர் பசும்பால் ஊற்றி குழைந்ததும் மருந்துச் சரக்குகளைக் கொட்டி, காய்ந்த திராட்சையோடு 100 மி.லிட்டர் தேனை ஊற்றி கிண்டி நெய்யை உருக்கி ஊற்றி கிண்டி இறக்கி குங்குமப்பூவைப் போட்டு பத்திரப்படுத்த வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
காலை 10 கிராம், மாலை 10 கிராம் என 40 நாட்களுக்கும், 80 நாட்களுக்கும் உண்ணலாம்.
தீரும் நோய்கள்:
மார்பு வலி, படபடப்பு, மூச்சுத் திணறல், நெஞ்சுக் குத்துதல் ஆகிய நோய்கள் குறையும்.
பத்தியம்:
கடலைப் பருப்பு, பூசணி, பரங்கி, உருளைக் கிழங்கு, குளிர்ந்த பானம், மதுவகைகள், தயிர், மாமிச வகைகள் ஆகிய உணவுகள் சாப்பிடக் கூடாது.
உண்ண வேண்டிய உணவுகள்:
இளங்காய்கள், புழுங்கலரிசி, பசு மோர், பசும் பால், மிளகு, சீரகம், பூண்டு, கொத்தமல்லி, கீரைகள், மலை வாழைப்பழம், தேன், வெந்நீர்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» இளைப்பிற்கான இளகல்
» ஆண்மை குறைவிற்கான இளகல்
» சொறிக்கான இளகல்
» சொறிக்கான இளகல்
» இளைப்பிற்கான இளகல்
» ஆண்மை குறைவிற்கான இளகல்
» சொறிக்கான இளகல்
» சொறிக்கான இளகல்
» இளைப்பிற்கான இளகல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum