சொறிக்கான இளகல்
Page 1 of 1
சொறிக்கான இளகல்
அறிகுறிகள்:
உடலில் சொறி.
தேவையான பொருள்கள்:
மிளகு = 100 கிராம்
திப்பிலி = 20 கிராம்
சிவனார் வேம்பு = 20 கிராம்
சிவகரந்தை முழுச்செடி = 20 கிராம்
அருகம்புல் = 20 கிராம்
வெண்கடுகு = 20 கிராம்
கஸ்தூரி மஞ்சள் = 20 கிராம்
சித்திரமூல வேர்ப்பட்டை = 20 கிராம்
தூய தேன் = 500 கிராம்
பசும்பால் = 150 மி.லி
செய்முறை:
மிளகையும், திப்பிலியையும் ஒன்றாக உடைத்து மண் பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும்.
சிவனார் வேம்பை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு பசும்பாலை ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
சிவகரந்தை முழுச்செடியை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி கொள்ளவும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
வெண்கடுகை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
கஸ்தூரி மஞ்சளை ஒன்றிரண்டாக உடைத்து மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி இளநீரை விட்டு6 மணி நேரம் ஊற வைத்து இளநீரை மட்டும் நீக்கி மீண்டும் 200 மி.லி புதிய இளநீரை விட்டு 6 மணி நேரம் ஊற வைத்து பிறகு மஞ்சளை எடுத்து வெயிலில் காய வைத்து கொள்ளவும்.
சித்திரமூல வேரை பச்சையாக கொண்டு வந்து வேரின் பட்டையை மட்டும் தட்டி எடுத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து சலித்து ஒரு புதிய மண் பானையில் போட்டு சிறுக சிறுக தேனை ஊற்றி மரக்கரண்டியால் கிளறி விட்டு புரட்டி விட்டு இளகல் போல செய்யவும். அல்லது ஒரு மண் பாத்திரத்தில் தேனை ஊற்றி கிளறி எடுத்து ஆற வைத்து மண் தட்ட்டால் மூடி காற்று புகாமல் இறுக கட்டி 3 நாட்கள் கழித்து கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த இளகலை காலை உணவுக்கு 1 மணி நேரம் முன்னதாக அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வரவும். மாலை 6 மணி அளவில் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும்.
சாப்பிட கூடாதவை:
மருந்து சாப்பிடும் நாட்களில் இறைச்சி உணவு, கத்தரிக்காய், பூசணி, பரங்கிக்காய், அகத்திக்கீரை, கடலை வகைகள், தயிர், குளிர்ந்த பானங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிக்கவும். புளிக்குழம்பை குறைக்கவும்.
சாப்பிட கூடியவை:
துவரை, பச்சை பயறு, புழுங்கலரிசி, தேங்காய் எண்ணெய், இளங்காய்கள், பால், மோர், நெய் ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம்.
குறிப்பு:
மருந்து சாப்பிடும் நாட்களில் மலச்சிக்கல் ஏற்பட்டால் உணவில் கீரைகள், மோர் இவற்றை அதிகமாக சேர்த்து கொள்ளவும். முன்று முறைக்கு மேல் பேதி ஏற்பட்டால் அல்லது பேதி நிற்கும் வரை மட்டும் தயிர் சேர்த்து கொள்ளலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சொறிக்கான இளகல்
» தாமரைப் பூ இளகல்
» இளைப்பிற்கான இளகல்
» இளைப்பிற்கான இளகல்
» ஆண்மை குறைவிற்கான இளகல்
» தாமரைப் பூ இளகல்
» இளைப்பிற்கான இளகல்
» இளைப்பிற்கான இளகல்
» ஆண்மை குறைவிற்கான இளகல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum