உடல்ஆரோக்கியம் பெற சூரணம்
Page 1 of 1
உடல்ஆரோக்கியம் பெற சூரணம்
தேவையான பொருட்கள்:
இஞ்சி = 750 கிராம்
மிளகு = 20 கிராம்
சடா மஞ்சள் = 20 கிராம்
அதிமதுரம் = 20 கிராம்
கோஷ்டம் = 20 கிராம்
ஓமம் = 20 கிராம்
திப்பிலி = 20 கிராம்
சன்ன லவங்கப்பட்டை = 20 கிராம்
சுக்கு = 10 கிராம்
வெட்டிவேர் = 10 கிராம்
கடுக்காய் = 10 கிராம்
நெல்லிக்காய் = 10 கிராம்
தாணிக்காய் = 10 கிராம்
மஞ்சிஷ்டை = 20 கிராம்
கொடி வேலி (பட்டை) = 10 கிராம்
வால் மிளகு = 10 கிராம்
கொத்தமல்லி = 10 கிராம்
இலவங்கப்பத்திரி = 10 கிராம்
சந்தனக் கட்டை = 10 கிராம்
கருங்காலிப்பட்டை = 10 கிராம்
சாதிக்காய் = 5 கிராம்
சாதிப்பத்திரி = 5 கிராம்
மூங்கில் உப்பு= 5 கிராம்
கற்கண்டு = 20 கிராம்
திராட்சை = 20 கிராம்
பேரீச்சங்காய் = 20 கிராம்
தேன் = 120 கிராம்
நெய்= 240 கிராம்
மாவு வெல்லம்= 750 கிராம்
கிராம்பு = 20 கிராம்
செய்முறை:
இஞ்சியைத் தோல் சீவி, வட்டமாக நறுக்கி, வெயிலில் காய வைத்து, சிறிது நெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவேண்டும். பேரீச்சங்காய், திராட்சை தவிர மற்றவற்றைச் சுத்தம் செய்து லேசாக வறுத்துக் கொள்ளவேண்டும். இதை இடித்து, பொடித்து சலித்துக் கொள்ளவேண்டும். பேரீச்சங்காய், திராட்சை ஆகியவற்றை குழி அம்மியில் வைத்து நன்றாக அரைக்கவேண்டும். விழுதானவுடன் சர்க்கரை, நெய், தேன் விட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
ஒரு நாளைக்கு 3 – 6 கிராம், இருவேளை சாப்பிடவேண்டும்.
தீரும் நோய்கள்:
நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், பசியின்மை, ருசியின்மை, குன்ம வயிற்று வலி, சோகை காமாலை, சுவாசகாசம், மலக்கட்டு, உடல் வலி, வாய்வு ஆகிய நோய்கள் குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும்.
பத்தியம்:
அதிகப் புளி, காரம், எண்ணெயில் வறுத்த உணவு, கிழங்கு வகைகள், பயிறு வகைகள் ஆகியவற்றை நீக்கவேண்டும்.
நன்கு எளிதில் செரிக்கக் கூடிய உணவை உட்கொள்ளவேண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum