தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு!

Go down

மகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு! Empty மகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு!

Post  ishwarya Sat Feb 16, 2013 6:24 pm

எல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் பிப்ரவரி 10, ஞாயிறு மாலை நமது தளம் ஏற்பாடு செய்த இந்த ‘மகா பெரியவா சொற்பொழிவு’ நிகழ்ச்சி + ஆப்ரஹாம் லிங்கன் பிறந்தநாள் சிறப்புரை மிக மிகச் சிறப்பாக நடந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரும் மெச்சும்படியாகவும் அமைந்தது.

விழா சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் இந்தளவு சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு காரணம் உண்மையில் அந்த பரம்பொருளின் கடைக்கண் பார்வை தான்.

இந்த நிகழ்ச்சியை நான் எந்த சூழ்நிலையில் நடத்தினேன் என்பதை அந்த ஆண்டவனும் மகா பெரியவாவும் மட்டுமே அறிவார்கள்.

நல்ல முயற்சிகளுக்கு இறைவன் என்றும் துணையிருப்பான். சோதனைகளை கண்டு கலங்காது “எண்ணித் துணிக கருமம்” என்று கருதி செயல்பட்டால் சோதனைகள் விலகி பாதை தெளிவாகும் பயணம் தொடரும் என்பதை மற்றொரு முறை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டேன்.

இது என்னுடைய பர்சனல் விழா அல்ல. பொது விழா. இருப்பினும் சிலரை என் கடும் அலுவல்களுக்கிடையேயும் வருந்தி வருந்தி அழைத்தேன். மின்னஞ்சல் செய்தேன். குறுந்தகவலும் அனுப்பினேன்.

ஆனால் பாலம் ஐயா அவர்களை ஒரே ஒரு முறை – அதுவும் அலைபேசியில் மட்டுமே – அதுவும் சனிக்கிழமை காலையில் தான் அழைத்தேன். அது கூட ஒரு பார்மாலிட்டிக்காகத் தான். (அவருக்கு வலைத் தளம் பார்க்க தெரியாது. குறுந்தகவலும் படிக்க தெரியாது.)


எத்தனையோ பேருக்கு நான் மறுபடியும் எஸ்.எம்.எஸ். மூலம் நினைவூட்டுதல் செய்ய, ஐயாவுக்கு நான் மறுபடியும் நினைவூட்டக்கூட இல்லை. ஆனாலும் என் ஒரே ஒரு அலைபேசி அழைப்பை ஏற்று அவர் வந்திருந்து சிறப்பித்து என்னையும் மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்துவிட்டார். ‘மேன்மக்கள் மேன்மக்களே’ என்பதை நிரூபித்துவிட்டார். இதை விட பெரிய பாக்கியம் அடியேனுக்கு என்ன இருக்க முடியும்?

அதே போல ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மகாத்மியத்தை வையம் முழுதும் பரப்பிய மானாமதுரை டாக்டர்.சேதுராமன் அவர்களின் மகன் திரு.லக்ஷ்மி நரசிம்மன் தன் குடும்பத்தோடு வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்கொண்டு சிறப்பித்தார். இதை விட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்?

ஒவ்வொரு முறையும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தும்போது பலப் பல விஷயங்களை தெரிந்துகொள்கிறேன். அனுபவப்படுகிறேன். புரிந்துகொள்கிறேன். இறைவனுக்கு நன்றி. நன்றி.

தோட்டத்தில் எத்தனையோ மலர்கள் மலர்ந்தாலும் இறைவனுக்கு அணிவிக்கப்படும் மாலையில் இடம்பெறும் பேறு சிலவற்றுக்கு தானே கிடைக்கிறது?

இந்த எளிய முயற்சிக்கு பக்கபலமாக இருந்து தோள் கொடுத்த நண்பர்களுக்கும் வந்திருந்த நண்பர்ளுக்கும், தள வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

விழாவின் துவக்க உரையில் நான் கூறியதே “வந்திருக்கும் பாக்கியசாலிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்” என்பது தான்.

விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு ஒரு எதிர்பாராத இனிய பரிசு நம் தளம் சார்பாக அளிக்கப்பட்டது.

மகா பெரியவரின் அறிய புகைப்படம் ஒன்று தான் அது.

இந்த படம் என்னிடம் வந்ததே ஒரு அற்புதமான நிகழ்வு தான்.

என்னை சார்ந்தவர்களுக்கும் என்னுடன் இருப்பவர்களுக்கும் எப்போதுமே சர்ப்ரைஸாக ஏதாவது மகிழ்ச்சி தருவது என் வழக்கம். மேற்படி விழாவுக்கு வருபவர்களுக்கு அவர்கள் சந்தோஷத்தில் மூழ்கும்படி நம் சக்திக்கு உட்பட்டு ஏதேனும் ஒரு சிறிய பரிசு அளிக்கவேண்டும் என்று முடிவு செய்து யோசித்த போது “மகா பெரியவா” பாக்கெட் சைஸ் படம் ஏதாவது தரலாம் என்று முடிவு செய்தேன்.

படத்தை நூற்றுக்கணக்கில் வாங்கி அதில் நம் தளத்தின் பெயரை ஸ்க்ரீன் பிரிண்ட் செய்து தருவதாக உத்தேசம். இதற்காக
கடைகளில் சென்று பல மகா பெரியவா பாகெட் சைஸ் படங்களை பார்த்தேன். எதுவுமே எனக்கு திருப்தியாக அமையவில்லை. நிகழ்ச்சி தேதியோ நெருங்கிக்கொண்டிருக்கிறது.

எப்படியாவது ஏதாவது படத்தை கொடுக்கணும் என்பதில் மட்டும் உறுதி குறையவில்லை.

வெள்ளிக்கிழமை அன்று மாலை நிகழ்ச்சி நடைபெற்ற கோவில் மண்டபத்தின் பொறுப்பாளரை பார்த்து பாக்கி அடவான்ஸ் தொகை கட்ட சென்றிருந்தேன். அப்போது அவர், “சுந்தர் சார் உங்களுக்கு ஒரு பரிசு வெச்சிருக்கேன்” என்று கூறி தனது மேஜை டிராயரில் இருந்து பரமாச்சாரியார் படம் ஒன்றை எடுத்து தந்தார்.

படத்தை பார்த்து நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. “மகா பெரியவா பத்தி நிகழ்ச்சி பண்ற உங்களுக்கு மகா பெரியவா படம் தேடி வந்திருக்கு பார்த்தீங்களா?” என்றார்.

“என் பாக்கியம் சார்” என்றேன் கண்களில் ஒற்றிக்கொண்டு.

அவர் கொடுத்தது சாதாரண படம் அல்ல. சிதம்பரத்தில் நடராஜருக்கு அணிவிக்கப்படும் குஞ்சிதபாதத்துடன் மகா பெரியவா காணப்படும் அதிசய படம்.

அந்த படத்தை பற்றிய விபரத்தை இணைப்பில் காணலாம்.

(Double click the image to ZOOM and READ the text)

நமது நிகழ்ச்சியில் அனைவருக்கும் அளிக்க பரமாச்சாரியார் படம் ஒன்றிற்காக தேடி அலையும் கதையை சொல்லி “இந்த படத்தை தான் நீ கொடுக்கணும்” என்று மகா பெரியவாவே உத்தரவிட்டுள்ளதாக கருதுகிறேன் சார் என்றே அவரிடம்.

அந்த படத்தை பிரிண்ட் செய்து ஒரு பத்து – பதினைந்து காப்பி தன்னிடம் ஒருவர் தந்ததாகவும் எனக்காக ஒன்றை எடுத்து வைத்திருந்ததாகவும் கூறினார் அவர்.

இந்த படத்தையே நமது நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கும் தரலாம் என்று கருதி, அதை பிரிண்ட் செய்து அளித்தவரிடம் நமது நிகழ்ச்சியை பற்றிய விபரத்தை கூறி, “இதே படத்தை நான் ஸ்கேன் செய்து பிரிண்ட் போட்டு தரலாம்னு இருக்கேன். உங்க மேலான அனுமதி வேண்டும்” என்றேன். “தாராளமா சார்…!” என்று அவர் அனுமதி தந்த பிறகு பணிகள் துரிதமாக நடைபெற்றது.

200 படங்களுக்கு மேல் ரெடி செய்தேன். நேற்றைய நிகழ்ச்சியில் அனைத்தும் காலியாகிவிட்டது. வருபவர்களை இருக்கையில் அமரவைத்த பிறகு அவர்களுக்கு மேற்படி படமும், நம் தளத்தின் சார்பாக பிரிண்ட் செய்யப்படும் “ஆலய தரிசன முறைகள்” பற்றிய நோட்டீசும் அளிக்கப்பட்டது.

படத்தை பார்த்து பலர் பவசமடைந்து கண்களில் ஒற்றிக்கொண்டது கண்கொள்ளா காட்சி.

நிகழ்ச்சியில் நாம் பேசியது என்ன? திரு.சுவாமிநாதன் பேசியது என்ன? & திரு.சுவாமிநாதன் அவர்களுக்கு நாம் வழங்கிய அவர் சற்றும் எதிர்பாராத நினைவுப் பரிசு.

(அடுத்தடுத்த பதிவுகளில் இடைவெளியில்லாமல் அளிக்க முயற்சிக்கிறேன்.)

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிவன் கோவில் கட்ட இலவச நிலம் தந்த முஸ்லீம் பெரியவர் – மகா பெரியவா செய்த பிரதி உபகாரம் என்ன?
» ஷாருக்கானுக்கு ரஜினி அளித்த பரிசு!
» அடகு வைத்த வீட்டை தனியாரிடம் இருந்து மீட்டு வங்கியில் வைத்த கமல்
» டெல்லி மாணவியின் நண்பர் அளித்த பேட்டி பற்றி விசாரணை
» இருவினை தீர்க்க ஓர் வாய்ப்பு – மகா பெரியவா பற்றிய சொற்பொழிவை கேட்க வாருங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum