டெல்லி மாணவியின் நண்பர் அளித்த பேட்டி பற்றி விசாரணை
Page 1 of 1

டெல்லி மாணவி மீதான பாலியல் வன்புணர்ச்சி மற்றும்
கொலைச் சம்பவத்தில் கைதான ஐந்து நபர்களுக்கு எதிராகவும் சுமத்தப்பட்டுள்ள
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு டெல்லியில் உள்ள
நீதிமன்றமொன்று அனுமதி அளித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விரைவு நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய விடயங்கள்
இதேவேளை, குறித்த மாணவியுடன்
இருந்தபோது பஸ்ஸில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டு காயமடைந்த அவரது ஆண்
நண்பர் தனியார் செய்திச் சேவையொன்றுக்கு அளித்துள்ள பேட்டி குறித்து
காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ள
பெண் அடையாளப்படுத்தாமல் இருப்பதற்கான சட்டத்தை மீறும் வகையில் இந்த பேட்டி
அமைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களால்
பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு நேர்ந்துள்ள கொடூரங்களை வெளிப்படுத்த
முன்வருவதை ஊக்குவிப்பதற்காகவே இந்த பேட்டியை கொடுத்துள்ளதாகஉயிரிழந்த
மாணவியின் நண்பர் கூறியுள்ளார்.
'வீதியில் சென்றவர்கள் கண்டுகொள்ளவில்லை'
தனது நண்பிக்கும் தனக்கும் நேர்ந்த கொடூரங்களை விலாவாரியாக அவர் விபரித்துள்ளார்.
பேருந்தில் வந்த நபர்கள் தன்னையும் தனது
நண்பியையும் ஏமாற்றி பேருந்தில் ஏற்றியதாகவும், பின்னர் இரும்பிக்
கம்பியினால் தம்மைத் தாக்கியதாகவும், தம்மை நிர்வாணப்படுத்திய பின்னர் தனது
நண்பியை மாறிமாறி அவர்கள் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் அவர்
தொலைக்காட்சியில் கூறினார்.
தம்மைத் தாக்கியவர்களை எதிர்த்துப் போராட
முயன்றும் முடியாமல் மயங்கிப் போனநிலையில் தாம் வீதியில்
தூக்கியெறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இரத்தம் கொட்டகொட்ட வீதியில் வீசப்பட்ட நிலையில்
உதவிக்காக கூக்குரலிட்டும் வீதியில் சென்றவர்கள் யாரும் தம்மை நீண்டநேரமாக
கண்டுகொள்ளவில்லை என்று மிகவும் மனவருத்தப்பட்டபடி மாணவியின் நண்பர்
கூறினார்.
நீண்டநேரம் கழித்தே போலிசார் குறித்த இடத்துக்கு
வந்ததாகவும் தம்மை மருத்துமனைக்கு கொண்டுசெல்வதை தாமதப்படுத்தியதாகவும்
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொலையான பெண்ணின் நண்பர் தொலைக்காட்சி
பேட்டியில் கூறியுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இன்ப அதிர்ச்சி அளித்த பத்மஸ்ரீ பட்டம்: நடிகை ஸ்ரீதேவி பேட்டி

» டெல்லி மாணவி வேடத்தில் நடிக்க தயார் : லட்சுமிராய் பேட்டி
» மல்லிகா ஷெகாவத் பற்றி சிம்பு பேட்டி
» திருமணம் பற்றி யோசிக்கவில்லை: நயன்தாரா பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum