தி.மலையில் கார்த்திகை : மலையில் மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் தயார்
Page 1 of 1

திருவண்ணாமலை: அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய், அண்ணாமலையார் கோயிலுக்கு மதுரையில் இருந்து நேற்று கொண்டு வரப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18ம் தேதி முதல் கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று வெள்ளித் தேரோட்டமும், நாளை மகா ரத பவனியும் நடைபெற உள்ளது. தீப உற்சவத்தின் முக்கிய விழாவான மகா தீபப்பெருவிழா 27ம் தேதி நடைபெற உள்ளது.
அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபத்துக்கான நெய் காணிக்கை பக்தர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதற்காக, கோயில் கொடி மரம் அருகே சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. நாளை முதல் ராஜகோபுரம் அடுத்த திட்டிவாசல் அருகே, மற்றொரு சிறப்பு பிரிவு தொடங்கப்படுகிறது. மகா தீபத்துக்காக ஒரு கிலோ நெய் ரூ.200, அரை கிலோ நெய் ரூ.100, கால் கிலோ நெய் ரூ.50 வீதம் ஏராளமான பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நேற்று மாலை வரை யி7.50 லட்சம் நெய் காணிக்கை குவிந்துள்ளன.
இந்நிலையில், மகா தீபத்துக்கு பயன்படுத்தப்படும் 3,500 கிலோ தூய நெய், மதுரை காந்தி கிராமம் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து, அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று காலை கொண்டு வரப்டட்டது. 15 கிலோ எடையுள்ள 230 டின்களில் நெய் வைக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வரும் 27ம் தேதி அதிகாலை சேவைப் பணியாளர்கள் மூலம் தலைச்சுமையாக மலை உச்சிக்கு கொண்டுச் செல்லப்படும். 27ம் தேதி மாலை ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் பிரகாசிக்கும். மேலும், மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் ஆயிரம் மீட்டர் திரி (காடா துணி) திருப்பூரில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு, இன்று கோயிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தி.மலையில் கார்த்திகை உற்சவம் : நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது
» தி.மலையில் இன்று அதிகாலை பரணி தீபம் : பக்தர்கள் பரவசம்
» திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
» திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
» திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா; டிசம்பர் 8-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum