தி.மலையில் இன்று அதிகாலை பரணி தீபம் : பக்தர்கள் பரவசம்
Page 1 of 1

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்தாண்டு கார்த்திகை தீபதிருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டம் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. கார்த்திகை தீபதிருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவிக்கப்பட்டது.
அண்ணாமலையார் சன்னதியில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, சூரியன், சந்திரன் மற்றும் பிரதோஷ நந்தி அமைந்துள்ள கருவறை ஆகிய பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஏகனாக இருக்கிற இறைவன் அனேகனாகி (பஞ்சமூர்த்திகளாகி) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய 5 வகை தொழில்களை செய்கிறார் என்பதை விளக்கும் வகையில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அனேகனாக இறைவன் இருந்தாலும் அவன் ஒருவனே என்பதை விளக்கும் வகையில் பஞ்சவிளக்கில் இருந்து ஒரே தீபமாக Ôபரணி தீபம்Õ ஏற்றப்பட்டது.
பரணி தீபத்தை முத்துகுமாரசாமி குருக்கள் ஏற்றினார். அதை பக்தர்களுக்கு கணேசன் குருக்கள் காண்பித்தார். அப்போது கோயிலிலும், வெளியிலும் திரண்டிருந்த பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில மகாதீபம் ஏற்றப்படுகிறது. மகாதீப தரிசனத்தை காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் 3 டிஐஜிக்கள், 12 எஸ்பிக்கள், 250 கமாண்டோ போலீசார் உள்பட 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் கெடுபிடி
கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாக்களான பரணிதீபம், மகாதீபம் தரிசனம் செய்ய கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பது வழக்கம். இதற்காக கடந்த ஆண்டு வரை சிறப்பு தரிசன அட்டை (பாஸ்) வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பாஸ் ரத்து செய்யப்பட்டது. அதனால் கோயிலுக்கு முதலில் வரும் 12 ஆயிரம் பக்தர்கள் பரணிதீப தரிசனம் காண பேகோபுரம் வழியாக இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அறிவித்தபடி பரணி தீப தரிசனத்தை காண 12 ஆயிரம் பக்தர்களை கோயிலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. குறைந்த அளவு பக்தர்களையே போலீசார் அனுமதித்து இருந்தனர். பரணி தீபம் ஏற்றிய பிறகு தங்களை தரிசனத்துக்கு அனுமதியுங்கள் என அங்கிருந்த பக்தர்கள் போலீசாரிடம் கேட்டனர். ஆனால் போலீசார் அவர்களை பரணிதீப தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தி.மலையில் கார்த்திகை : மலையில் மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் தயார்
» திருப்பதியில் தேரோட்டம் : பக்தர்கள் பரவசம்
» தி.மலையில் கார்த்திகை உற்சவம் : நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது
» லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
» திருவண்ணாமலை தீபம் : தரிசன டிக்கெட் இன்று விற்பனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum