தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்

Go down

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம் Empty சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்

Post  ishwarya Sat Feb 16, 2013 1:32 pm

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை 26ம் தேதி நடக்கிறது. ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து 22ம் தேதி தங்க அங்கி
ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 15ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாள் நடைபெறும் மண்டல கால பூஜை வரும் 26ம் தேதியுடன் நிறைவடையும். அன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.

மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பன் விக்கிரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். 420 பவுன் எடை கொண்ட இந்த தங்க அங்கி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான பாலராம வர்மா, சபரிமலை ஐயப்பனுக்கு 1973ல் காணிக்கையாக அளித்தார். இவ்வருட மண்டல பூஜைக்காக வரும் 22ம் தேதி தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படுகிறது. இது, 25ம் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்ப விக்கிரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். மறுநாள் மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டதும் இந்தாண்டு மண்டல காலம் நிறைவடையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum