மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது
Page 1 of 1

திருவனந்தபுரம்: மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று காலை சாத்தப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் 12ம் தேதி நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 64 நாட்கள் நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜை நேற்று முன்தினம் இரவுடன் முடிவடைந்தது. கடந்த 14ம் தேதி மகர விளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்ததை அடுத்து நேற்று காலை 7 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதன் பின்னர் ஐயப்பனுக்கு ஜல அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதியான அசோகவர்மா தரிசனம் செய்தார். பின்னர் மேல்சாந்தி தாமோதரன் போத்தி கோயில் நடையை சாத்தி அதன் சாவியை அசோகவர்மாவிடம் கொடுத்தார்.
தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்துக்கு சபரிமலை கோயிலில் பூஜை நடத்த வேண்டும் எனக்கூறி அசோகவர்மா, கோயில் சாவியை மீண்டும் மேல்சாந்தியிடம் வழங்கினார். இதன்பின்னர் அசோகவர்மா 18ம் படி வழியாக இறங்கி சென்றார். இவ்வருட மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்தது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மண்டல பூஜை, மகர விளக்கு: சபரிமலை கோயில் வருவாய் ரூ.170 கோடி
» சபரிமலை மண்டல பூஜை நிறைவு
» சபரிமலை மண்டல பூஜை நிறைவு
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum